ஆர்க்டிக் பனிப்பாறையில் ‘வேற்றுகிரக’ மீன்; ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்!

ஆர்க்டிக் பனிப்பாறையில் கண்டுபிடிக்கப்பட்ட, பிரகாசமான கண்கள் கொண்ட புதிய வகை மீன் ஆராய்ச்சியாளர்களை திகைக்க வைத்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 23, 2022, 05:34 PM IST
  • ஆர்க்டிக் பனிப்பாறையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை மீன்
  • பிரகாசமான கண்கள் கொண்ட மீன்.
  • நியூயார்க் நகர பல்கலைக்கழகத்தின் உயிரியல் பேராசிரியர் டேவிட் க்ரூபர் மீன்கள் குறித்த ஆய்வுக்கு தலைமை தாங்கினார்.
ஆர்க்டிக் பனிப்பாறையில் ‘வேற்றுகிரக’ மீன்; ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்! title=

ஆர்க்டிக் பனிப்பாறையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை மீன் ஆராய்ச்சியாளர்களை திகைக்க வைத்துள்ளது. இந்த மீன்களுக்கு பிரகாசமான கண்கள் உள்ளன. இந்த மீன்களின் இரத்தத்தில் உள்ள ஃப்ரீஸ் எதிர்ப்பு புரதம் காரணமாக, அவற்றின் நிறம் பிரகாசமான பச்சை நிறத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் ஆராய்ச்சியாளரும், நியூயார்க் நகர பல்கலைக்கழகத்தின் உயிரியல் பேராசிரியருமான டேவிட் க்ரூபர் இந்த மீன்கள் குறித்த ஆய்வுக்கு தலைமை தாங்கினார்.

பிரகாசமான கண்கள் கொண்ட மீன்

பனிப்பாறைகளின் பிளவுகளில் வாழ்ந்த சில வகை மீன்களில் நத்தை மீன்களும் ஒன்றாகும். குளிர்ச்சியான சூழலில் இவ்வளவு சிறிய மீன் வாழக்கூடியது என்பது ஆச்சர்யம். ஆண்டிஃபிரீஸ் புரதங்கள் சிறிய பனி படிகங்களின் மேற்பரப்பில் ஒட்டிக்கொள்கின்றன. அவை பெரிய, மிகவும் ஆபத்தான, படிகங்களாக வளர்வதை குறைக்கின்றன அல்லது தடுக்கின்றன என்று க்ரூபர் கூறினார். இவற்றின் கண்கள் பிரகாசிப்பதாலும், அரிதான தோற்றத்தினாலும், வேறு கிரகத்தின் மீன்கள் போல் காட்சி அளிக்கின்றன. 

மேலும் படிக்க | Viral News: 8 மனைவிகளுக்கும் ஒரு அரண்மனை; டைம் டேபிள் போட்டு காதல் செய்யும் நபர்!

மீன்களின் கண்கள் பிரகாசிப்பதற்கான காரணம்

வடக்கு மற்றும் தென் துருவங்களைச் சேர்ந்த மீன்கள் இந்த புரதங்களை உருவாக்கியுள்ளன என்று அவர் கூறினார். கிரீன்லாந்தில் நடந்த இந்த ஆராய்ச்சிக்குப் பிறகு, கடல்வாழ் உயிரினங்களில் பரிணாம மாற்றங்கள் ஏற்படுவது தெளிவாகியுள்ளது. பிரகாசம் என்பது ஆர்க்டிக் பகுதியின் கடுமையான சூழ்நிலையில் உடல் வெப்பநிலையை பராமரிக்க உயிரினங்களால் உருவாக்கப்பட்ட ஒரு பண்பு என்று கருதப்படுகிறது.

வைரலாகும் படங்கள்

இந்த மீன்களின் படத்தை பார்த்து அனைவரும் திகைத்து போயுள்ளனர். இந்த மீன்களின் படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. பல பயனர்களும் இவை வேற்றுக் கிரக மீன்கள் என்று கூறியுள்ளனர்.

மேலும் படிக்க | Viral Video: தாய் - மகள் ஜோடியின் அற்புத நடனம்; பாராட்டித் தள்ளும் நெட்டிசன்கள்

மேலும் படிக்க | Viral Video: ‘குட்டிக்கரணம்’ போடும் புறா; இணையவாசிகளை சொக்க வைத்த வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News