சைரக்யூசிலிருந்து ஜார்ஜியாவின் அட்லாண்டா செல்லும் டெல்டா ஏர்லைன்ஸில் பயணம் செய்த பெண் ஒருவரின் வினோத செயல் தற்போது இணையத்தை வட்டமடித்து வருகின்றது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த பொழுது அதில் பயணம் செய்த பெண் ஒருவர் தன் கையில் உள்ள துணியில் சுருட்டி வைத்திருந்த பூனையை திறந்து உடனே அதற்கு தாய்ப்பால் கொடுக்க ஆரம்பித்தார்.
ALSO READ | வட கொரியா: தடை செய்யப்பட்ட படத்தை பார்த்த மாணவருக்கு 14 வருட சிறை..!!
அவர் பால் கொடுத்துக் கொண்டிருக்கும்போது அந்த பூனை கத்த தொடங்கியது, பூனையை சத்தத்தால் எரிச்சலடைந்த பயணிகள் என்ன நடக்கிறது என்று கவனித்த போது, அந்த பெண் பூனைக்கு தாய்ப்பால் கொடுத்து கொண்டிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் விமான பணிப்பெண்களிடம் இதுகுறித்து புகார் அளித்தனர்.
அதன் பின்னர் சக பயணிகளும், விமான பணிப்பெண்களும் அந்த பெண்ணிடம் பூனைக்கு பால் கொடுப்பதை நிறுத்துமாறு கூறினார், ஆனால் அந்த பெண் அவர்களது பேச்சை கேக்காமல் மீண்டும் கத்திக்கொண்டு இருக்கும் அந்த பூனைக்கு பால் கொடுக்கவே முயன்றுள்ளார். இதனையடுத்து அதிகாரிகளுக்கு ACARS மூலம் இப்பெண்ணின் செயல் குறித்து செய்தி அனுப்பப்பட்டது.
பின்னர் விமானம் அட்லாண்டாவில் தரையிறங்கியதும் அதிகாரிகள் அப்பெண்ணை விசாரணைக்கு தனியாக அழைத்து சென்றுவிட்டனர். "அவர் வைத்திருந்த பூனைக்கு முடியே இல்லை, அவர் அதை ஒரு துணியில் சுற்றி வைத்திருந்ததை பார்க்கும்பொழுது குழந்தையை வைத்திருந்தது போல இருந்தது" என விமானத்தில் சிலர் கூறியுள்ளனர்.
ALSO READ | ஆச்சர்ய தகவல்! குதிகால் உயர செருப்புகள் ஆண்களுக்காகத் தான் வடிவமைக்கப்பட்டது..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR