இந்தியா - இஸ்ரேல் இடையே 7 புதிய ஒப்பந்தம் கையெழுத்து

Last Updated : Jul 6, 2017, 08:43 AM IST
இந்தியா - இஸ்ரேல் இடையே 7 புதிய ஒப்பந்தம் கையெழுத்து title=

விண்வெளி, விவசாயம், தொழிற்துறை மேம்பாடு உட்பட இந்தியா - இஸ்ரேல் இடையே புதிய ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.  

அரசு முறைப்பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூவை சந்தித்தார். பின்னர் இரு நாடுகளிடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதையடுத்து டெல் அவிவ் நகரில் இந்தியர்களை பிரதமர் மோடி சந்தித்தார்.

இஸ்ரேல் பிரதமர் பேசியது: 

டெல் அவிவ் நகர் ஒரு மிகப்பெரிய விழாவை கொண்டாடுகிறது. இரு நாடுகளிடையே வரலாற்று சிறப்புமிக்க ஒரு நிகழ்வாகும் இது. தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியாவும் இஸ்ரேலும் இணைந்து போராடும்

பிரதமர் மோடி பேசியது: 

இஸ்ரேலில் அளிக்கப்பட்ட வரவேற்பினை என்னால் மறக்க முடியாது. இந்திய - இஸ்ரேல் உறவு இனி புதிய உச்சத்தை எட்டும். இந்தியாவின் வளர்ச்சிக்கு ஜுவிஸ் மக்களின் பங்கு பெரியது.

சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம் ஆகிய மூன்றும் எனது அரசின் தாரக மந்திரங்கள். ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்கு சிறந்த முன்னுதாரணம். இந்தியாவில் ஏழைகளுக்காக வங்கிகள் செயல்படுகின்றன. 2022-ம்  ஆண்டில் புதிய இந்தியா பிறக்கும். 2022-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் அனைவருக்கும் வீடுகள், தண்ணீர், மின்சாரம் கிடைக்க வழிவகை செய்யப்படும். 

இளைஞர்கள் மத்தியில் ஒருங்கிணைப்பை உருவாக்க வேண்டும். பொருளாதார சீர்திருத்தம் இந்தியாவில் நல்ல வளர்ச்சியை ஏற்படுத்தும். விவசாயிகள் இந்தியாவின் முதுகெலும்புகள். விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதே எனது நோக்கம்.

சேவையில் உலகத்தின் சின்னமாக இந்தியா திகழ்கிறது. மும்பை - டெல் அவிவ் விமான சேவை துவக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

தொழிற்நுட்ப வளர்ச்சியில் இந்தியா - இஸ்ரேல் தோழோடு தோழ் பயணிக்கும். இஸ்ரேல் இளைஞர்களுக்கு எனது சல்யூட். 

இவ்வாறு அவர் பேசினார்.

Trending News