சீனாவில் பள்ளியில் குழந்தைகளுக்கு விஷ உணவை கொடுத்த வழக்கில் ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்!!
தனது பள்ளி குழந்தைகளுக்கு கிண்டர்கார்டன் ஆசிரியை ஒருவர் நைட்ரேட் விஷம் கலந்த உணவைக் கொடுத்த சம்பவம் சீனாவில் நடந்துள்ளது. இதையடுத்து அனைத்துக் குழந்தைகளுக்கும் திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதை தொடர்ந்து ஆசிரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து, குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட உணவில் நைட்ரேட் விஷம் கலந்திருந்ததாக கண்டறிந்தனர். கிண்டர்கார்டன் வந்த குழந்தைகள் மாலை மீண்டும் வீடுதிரும்பியவுடன் உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. இதனால் அக்குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். ஒரே நேரத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனதால் காவல்துறையினர் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில் குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுக்கப்பட்ட கஞ்சியில் நைட்ரேட் கலந்திருந்தது தெரியவந்துள்ளது. இறைச்சி பதப்படுத்துவதற்காக பயன்படும் வேதிப்பொருள் எப்படி கஞ்சியில் கலந்தது என அதனை கொடுத்த ஆசிரியையிடம் விசாரணை நடந்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து பள்ளி ஆசிரியை குழந்தைகளுக்கு மதிய உணவாக கஞ்சி அளித்ததும், அதில் அவர் உணவில் நைட்ரேட் கலந்துகொடுத்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஆசிரியை கைது செய்யப்பட்டு விசாரணை செய்து வருகின்றனர்.