104 வயது முதியவரின் மரண ஆசை நிறைவேற்றிய சுவிட்சர்லாந்த்!

ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் உள்ள எடித் கோவன் பல்கலைக்கழக ஆய்வுத்துறையில் கவுரவ பேராசிரியராக பணியாற்றிய டேவிட் குட்ஆல் (வயது 104) சட்ட உதவியுடன் தன் உயிரை மாய்ந்து கொண்டார்.

Last Updated : May 11, 2018, 10:54 AM IST
104 வயது முதியவரின் மரண ஆசை நிறைவேற்றிய சுவிட்சர்லாந்த்! title=

ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் உள்ள எடித் கோவன் பல்கலைக்கழக ஆய்வுத்துறையில் கவுரவ பேராசிரியராக பணியாற்றிய டேவிட் குட்ஆல் (வயது 104) சட்ட உதவியுடன் தன் உயிரை மாய்ந்து கொண்டார்.

தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ள விரும்பிய விஞ்ஞானி டேவிட் குட்ஆல், தனது தற்கொலைக்கு உதவுமாறு ஆஸ்திரேலியா அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். 

கடந்த இரண்டு வருடமாகவே தற்கொலை செய்து கொள்ள ஆசைப்பட்டுள்ளார் இவர். ஆஸ்திரேலியாவில் கருணைக் கொலைக்கு அனுமதி கிடையாது என்பதால் அவர் தனது மரண ஆசையை இரண்டு வருடமாக அடக்கி வைத்து இருந்துள்ளார்.

தானாகவே இறக்கும் கோரிக்கை கொண்டிருந்த இவர் ஆஸ்திரேலியாவில் இருந்து சுவிட்சர்லாந்து நாட்டிற்கு இடம்பெயர்ந்து குடியுரிமையும் வாங்கியுள்ளார்.

சுவிட்சர்லாந்து வந்திறங்கிய அவர், பசல் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு விஷ ஊசி செலுத்தி மரணம் விளைவிக்கப்பட்டது. 

Trending News