சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் இணையும் விஜய் சேதுபதி!!

தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் இணையும் விஜய் சேதுபதி!

Last Updated : Apr 26, 2018, 01:41 PM IST
சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் இணையும் விஜய் சேதுபதி!!  title=

இந்தியா முழுவதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-க்கு பிரமாண்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது. தற்போது நடிகர் ரஜினிகாந்த் கபாலி படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் காலா படத்தில் நடித்துள்ளார். 

இப்படத்தில் ரஜினியுடன், ஹுமா குரேசி, நானா படேகர், சமுத்திரக்கனி, சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், 'வத்திகுச்சி' திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், அஞ்சலி பட்டேல், ஈஸ்வரிராவ், அருந்ததி, சாக்ஷி அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

இதை தொடர்ந்து, சில வாரங்களுக்கு முன்பு சூப்பர்ஸ்டார் ரஜினியின் படத்திற்கு அனிருத் இசை அமைப்பதாக சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்நிலையில், இன்று சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமான அறிவிப்பை சன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இயக்குனர் மணிரத்னம் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் 17-வது படமான செக்க சிவந்த வானம் திரைபப்டத்தில் பிசியாக வருகிறார். இதற்கிடையில் இவருக்கு நடிகர் ராகினியுடன் நடிக்கும் அதிஷ்டம் அடித்துள்ளது இவருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 

 

 

Trending News