அசத்தும் அமெரிக்க நிறுவனம்: குறைந்தபட்ச ஊதியமே ரூ.64 லட்சம்

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் கிராவிட்டி பேமண்ட்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கிரடிட் கார்டு சேவை உள்ளிட்ட நிதி சேவைகளை செய்து வருகிறது.இந்நிறுவனத்தை லூகாஸ் மற்றும் Dan Price ஆகிய சகோதரர்கள் கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கினர்.

தொடக்கம் முதலே ஊழியர்களுக்கு அதிக ஊதியம் வழங்கி வரும் Dan Price, தற்போது தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியத்தை ஆண்டுக்கு 80 ஆயிரம் அமெரிக்க டாலர்களாக உயர்த்தியுள்ளார். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் 63 லட்சம் ரூபாய் ஆகும்.

Trending News