கத்துவா, உனா சம்பவம்: இப்போதாவது பேசுங்கள் மோடி ஜி - ராகுல் காந்தி

நாட்டில் பெரும் கொடுமைகள் நடைபெற்று வருகிறது. பிரதமர் அவர்களே, இப்போதாவது பேசுங்கள், இந்தியா உங்களை கவனித்துக் கொண்டு இருக்கிறது என ராகுல் காந்தி கேட்டுக்கொண்டு உள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 14, 2018, 02:20 PM IST
கத்துவா, உனா சம்பவம்: இப்போதாவது பேசுங்கள் மோடி ஜி - ராகுல் காந்தி title=

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி  8 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் ஒருவர் தப்பிக்க உதவிய காவல் அதிகாரி உட்பட 8 பேர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கைதாகியுள்ள அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று காஷ்மீர் மாநில பாஜக-வினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல உத்தரப்பிரதேசம் உனா நகரில் 18 வயதுக்குக் கீழ் உள்ள பெண்ணை பாஜக எம்.எல்.ஏ பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தப் பெண் தந்தை புகார் தெரிவிக்க சென்ற போது திடிரென மரணம் அடைந்துள்ளார். கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு மேலாகியும், இது குறித்து எவ்வித நடவடிக்கையும் உத்தர பிரதேச மாநில அரசு எடுக்கவில்லை.

ஜம்மு ஜாஷ்மீரின் கத்துவாவில் 8 வயது சிறுமி வன்கொடுமை செய்யபட்டு கொலை செய்யப்பட்ட சம்பவமும், உத்தரப்பிரதேசம் உனா நகர் சம்பவமும் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுக்குறித்து இதுவரை நாட்டின் பிரதமர் மோடி அவர்கள் எந்தவித கருத்தும் கூறவில்லை. இந்நிலையில், மோடியின் மவுனத்தை குறித்து காங்கிரஸ் தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி உள்ளார். அவர் கூறியதாவது:-

பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான வன்முறை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ஏன் கொலைக்காரர்கள், கற்பழிப்பு குற்றவாளிகள் அரசால் பாதுகாக்கப்படுகிறார்கள்?

இந்தியா உங்களை கவனித்துக் கொண்டு இருக்கிறது. 

#இப்போதாவதுபேசுங்கள்

என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

இதற்க்கு முன்னதாக, நேற்று நள்ளிரவு டெல்லி இந்தியா கேட் பகுதியில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி போராட்டம் நடத்தினார். இந்த பேரணியில் சோனியா காந்தி, பிரியங்கா வதேரா அவரது கணவர் ராபர்ட் வதேரா, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துக் கொண்டனர். ஏராளமான தொண்டர்களும் பங்கேற்றனர்.

டெல்லியை அதிர வைத்த ராகுல்: நள்ளிரவில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்!!

அப்பொழுது, நாட்டை உலுக்கிய இச்சம்பவத்தை குறித்து பிரதமரும் மௌனம் காத்து வருவது ஏன் என்ற கேள்வியை காங்கிரஸ் எழுப்பியது. மேலும் இந்த சம்பவங்களை கவனிக்காமல் தூங்கிக்கொண்டிருக்கும் மத்திய அரசை எழுப்புவதற்காகவும், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும் இந்த பேரணி போராட்டம் நடத்தப் படுகிறது என காங்கிரஸ் தெரிவித்தது.

 

 

Trending News