தனுஷ்கோடி-க்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை!!

கடல் சீற்றம் காரணமாக தனுஷ்கோடி பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது...! 

Last Updated : Apr 21, 2018, 12:49 PM IST
தனுஷ்கோடி-க்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை!! title=

கன்னியாகுமாரி, இராமநாதபுரம் கடற்புகுதியில் இன்று மற்றும் நாளை கடல் அலை சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து, தனுஷ்கோடி பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் முக்கியமாக கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு கடல் சீற்றம் அதிகரித்து காணப்படும் என தமிழக வருவாய்த்துறை ஆணையர் சத்யகோபால் நேற்று தகவல் அறிக்கையை வெளியிட்டார். 

இதனால் இன்று ராமேஸ்வரம், குமரி பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. மேலும், மாவட்ட ஆட்சியர்களின் அறிவுறுத்தலின் பேரில் கடலோர பகுதி மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த கடல் சீற்ற எச்சரிக்கை காரணமாக தனுஷ்கோடி பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு இந்த நிலை நீடிக்கும் என்பதால் இன்றும் நாளையும் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. சுமார் 5 கிமீ முன்னதாகவே காவல்துறையினர் தடுப்பு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Trending News