அதிமுக கட்சியின் சின்னமான இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கியது. இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கை வரும் அக்., 31-ம் தேதிக்குள் முடிவுக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
இதனால், இரட்டை இலை சின்னம் தொடர்பான ஆவணங்களை இந்த மாதம் 29-ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இபிஎஸ் அணி தங்கள் தரப்பு ஆவணங்கள் தாக்கல் செய்துள்ளது. அதேவேளையில், தினகரன் அணி, ஆவணங்கள் தாக்கல் செய்ய மேலும் 15 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தது.
கரூரில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை சோதனை சோதனை நடத்தி வருகிறது.
தினகரன் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜியின் நண்பர்கள், உறவினர்கள் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி கரூரில் 8 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சோதனை நடைபெறும் இடங்கள் செந்தில் பாலாஜியின் நண்பர்கள் வீடுகள் ஆகும். ராமகிருஷ்ணா நகர், தான்தோன்றிமலை உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
வழக்கின் அடுத்த கட்ட விசாரணை அக்டோபர் 4-ம் தேதி சென்னை ஐகோர்ட் ஒத்திவைப்பு. மறு உத்தரவு வரும் வரை 18 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்க தடை- சென்னை ஐகோர்ட். நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான தடை நீட்டிப்பு: சென்னை கோர்ட் உத்தரவு.
சட்டப்பூர்வமாக நாங்கள் மிகவும் பலமான நிலையினில் இருக்கின்றோம், நீதிமன்றத்திலிருந்து எங்களுக்கான நீதி நிச்சயம் கிடைக்கும் என தினகரன் தெரிவித்துள்ளார்.
Legally we are very sound and we will get justice from the Court: #TTVDhinakaran over disqualification of 18 MLAs by TN Speaker pic.twitter.com/kQllPvTKoG
டிடிவி தினகரன் ஆதரவு அதிமுக 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டதை எதிர்த்து தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்துள்ளனர்.
18 disqualified MLAs ( backing #TTVDhinakaran) had filed a plea challenging their disqualification by TN Assembly Speaker P. Dhanapal.
— ANI (@ANI) September 19, 2017
டிடிவி தினகரன் ஆதரவு அதிமுக 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டதை எதிர்த்து 18 பேரும் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவை விலக்கிக்கொண்டதற்கு நேரில் வந்து விளக்கம் அளிக்க சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பிய நிலையில் இதற்க்கு யாரும் கண்டுகொள்ளாத நிலையில் இந்த அதிரடி முடிவை எடுத்திருக்கிறார்.
இதன் மூலம் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இருந்த 18 எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் பதவியை இழந்துள்ளனர் மேலும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டு இருந்தார்.
டிடிவி தினகரன் ஆதரவு அதிமுக 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார். மேலும் பேரவை விதிகளின் படி, இன்று முதல் தகுதி நீக்கம் செய்யபடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவை விலக்கிக்கொண்டதற்கு நேரில் வந்து விளக்கம் அளிக்க சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பிய நிலையில் இதற்க்கு யாரும் கண்டுகொள்ளாத நிலையில் இந்த அதிரடி முடிவை எடுத்திருக்கிறார்.
இதன் மூலம் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இருந்த 18 எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் பதவியை இழந்துள்ளனர் மேலும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார்.
டிடிவி தினகரன் ஆதரவாளா்களான 19 சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள "தி வைண்ட் ஃப்ளவர்" ரெசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்து இருந்தது.
புதுச்சேரி அரியாங்குப்பம் அருகில் உள்ள சின்ன வீராம் பட்டினம் கடலோர கிராமத்தில் உள்ள "தி வைண்ட் ஃபளவர்" ரெசார்ட்டில் தற்போது அவர்களை தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது இன்று புதுச்சேரி சின்னவீராம்பட்டினத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கியிருக்கும் ரெசார்ட்டில் காவல் அதிகாரிகள் குவிந்தது உள்ளனர்.
டிடிவி தினகரன் ஆதரவாளா்களான 19 சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள "தி வைண்ட் ஃபளவர்" ரெசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரும்பாண்மை நிரூபிக்க சசிகலாவுக்கு ஆதராவாக இருப்பதாக கூறியிருந்த சட்டமன்ற உறுப்பினா்களை கூவத்தூர் விடுதியில் தங்க வைத்திருந்தார்.
இப்போது மீண்டும் அதே நிலை திரும்பியுள்ள நிலையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் தமிழக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டதால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பாண்மையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதிமுக இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதற்காக கட்சியில் இருந்து விலகி இருந்த அதிமுக கட்சியின் துணை போதுச்செயலாளர் தினகரன், இனி கட்சியை நான் வழி நடத்துவேன். இதனால் அனைத்து மாவட்ட நிர்வாகிகளை வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சந்தித்து பேச உள்ளதாக அறிவித்துள்ளார்.
அதிமுக,3 அணிகளாக பிரிந்துள்ள நிலையில், தினகரனின் இச்சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில், குறிப்பாக அதுமுக-வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினகரனிடம் விசாரணை நடத்த டில்லி போலீசார் இன்று இரவு சென்னை வர உள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு ரூ.60 கோடி லஞ்சம் தர தினகரன் முயற்சி செய்தது வெளியானது. இடைத்தரகராக செயல்பட்ட சுகேஷ் சந்தரா என்பவனை டில்லி போலீசார் கைது செய்தனர். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து தினகரன் மீது டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இரட்டை இலை சின்னத்தை பெற்று தர தினகரன் தரப்பில் லஞ்சம் பெற்றதாக சுகேஷ் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்ததாக தெரிகிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலாவின் அக்கா மகன் டிடிவி தினகரன் அதிமுக துணை பொதுச் செயலாளராக, இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.