அதிமுக கட்சியின் சின்னமான இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கியது. இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கை வரும் அக்., 31-ம் தேதிக்குள் முடிவுக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
இதனால், இரட்டை இலை சின்னம் தொடர்பான ஆவணங்களை இந்த மாதம் 29-ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இபிஎஸ் அணி தங்கள் தரப்பு ஆவணங்கள் தாக்கல் செய்துள்ளது. அதேவேளையில், தினகரன் அணி, ஆவணங்கள் தாக்கல் செய்ய மேலும் 15 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தது.
தினகரன் அணிக்கு அவகாசம் அளிக்க முடியாது எனவும், இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை திட்டமிட்டபடி வரும் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் என்றும், நாளைக்குள் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
Election Commission has rejected TTV Dhinakaran's plea to defer hearing on AIADMK's two-leaves symbol case.
— ANI (@ANI) September 28, 2017