தினகரனிடம் விசாரணை நடத்த டில்லி போலீசார் இன்று இரவு சென்னை வர உள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு ரூ.60 கோடி லஞ்சம் தர தினகரன் முயற்சி செய்தது வெளியானது. இடைத்தரகராக செயல்பட்ட சுகேஷ் சந்தரா என்பவனை டில்லி போலீசார் கைது செய்தனர். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து தினகரன் மீது டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இரட்டை இலை சின்னத்தை பெற்று தர தினகரன் தரப்பில் லஞ்சம் பெற்றதாக சுகேஷ் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்ததாக தெரிகிறது.
இந்நிலையில், டெல்லி குற்றப்பிரிவு போலீசார் இன்று மாலை 5.15 மணியளவில் டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை கிளம்புகின்றனர் என்றும், அவர்களுடன் இரட்டை இலை சின்னம் தொடர்பாக கைதான சுகேஷ் சந்திரசேகரும் சென்னை அழைத்து வரவுள்ளனர் என தெரிகிறது.