ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நாள் மட்டுமல்ல, பாஜகவின் ஸ்தாபன நாளும் ஆகும், அந்நாளில், அதிமுக, பாஜக, பாமக வேட்பாளர்களை மகத்தான் வெற்றியை பதிவு செய்வார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
தமிழகத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, அமமுக - தேமுதிக கூட்டணி மற்றும் நாம் தமிழர் என 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது என்றாலும், பிரதான போட்டி திமுக - அதிமுக கூட்டணி மட்டுமே. இந்த நிலையில் எந்தக் கூட்டணி வெற்றி பெறும்? யார் முதல்வராக வருவார்? என்ற எதிர்பார்ப்பில் தமிழகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவும் காத்துக்கொண்டுள்ளது
தனது தேர்தல் பரப்புரையின் போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா விமர்சித்ததன் காரணமாக தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கூறி, இன்று (வியாழக்கிழமை) அவரை கண்டித்ததுடன், அடுத்த 48 மணி நேரத்திற்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசாவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் இன்னும் ஒரு வாரத்தில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில் தேர்தல் ஆணயத்தின் அதிரடிப் படையினர் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஆங்காங்கே சோதனைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யானைகள் புத்துணர்வு முகாமில் புத்துணர்வு பெற்ற யானைகள் தங்களது இடத்திற்கு திரும்புகின்றன. யானைகளுக்கான 13வது புத்துணர்ச்சி முகாமின் பதிப்பு கோவையில் இருந்து 50 கி.மீ தூரத்தில் தேக்கம்பட்டியில் நிறைவடைந்தது.
கோயம்புத்தூர் தெற்குத் தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கான தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பாஜக தொண்டர்களுடன் கோலாட்டம் ஆடி அசத்தினார்.
தமிழகத்தில் தேர்தல் பரபரப்பான கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் பிரசாரங்களும் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. வாட்ஸ்அப் மூலம் தேர்தல் பரப்புரை செய்வது தொடர்பாக மெட்ராஸ் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தின் பதிலை கோரியுள்ளது.
தமிழகத்தில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
வரும் மார்ச் 30ம் தேதி வருகை தருகிறார். தாராபுரத்தில் போட்டியிடும் பாஜக தலைவர் எல். முருகன் (L.Murugan) அவர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார்.
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். தமிழகத்தின் சார்பில் தற்போது மாநிலங்களவை பிரதிநிதியாக இருந்த ஒரே ஒரு இஸ்லாமியர் முகமது ஜான் என்பது குறிப்பிடத்தக்கது.
தி.மு.க தலைவர் ஸ்டாலினின் மகனும் வாரிசுமான உதயநிதி ஸ்டாலின் வருமானத்தை மறைத்து, வரி ஏய்ப்பு செய்துவிட்டதாக அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த நிலையில், மதுரையில் அமைக்கப்பட்டுள்ள அம்மா ஜெயலலிதாவின் ஆலயத்தில் பிரகார தெய்வங்களாக பாஜக கட்சியினரின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் பிரபுதேவா தமிழகத்தில் எதிர்வரும் தேர்தல் தொடர்பாக பாடும் பாடல் ஒன்றை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தேர்தலில் அனைவரும், வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
காஞ்சீபுரத்தில் பிரசாரம் செய்துக் கொண்டிருந்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் கமலஹாசனுக்கு காயம் ஏற்படவில்லை. கார் சிறிது சேதமடைந்தது. தாக்குதலை அடுத்து, மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்கள், தாக்குதல் நடத்தியவரை ரத்தம் வருமளவு அடித்தனர்.
தேர்தல் பல நாட்கள் நடைபெற்றாலும் அதன் முக்கியமான நிகழ்வு வாக்குப் பதிவு தான். நேரடியாக வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிப்பதைத் தவிர, வேறு வழிகளிலும் வாக்களிக்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.