கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு முகாம் நிறைவு

யானைகள் புத்துணர்வு முகாமில் புத்துணர்வு பெற்ற யானைகள் தங்களது இடத்திற்கு திரும்புகின்றன. யானைகளுக்கான 13வது புத்துணர்ச்சி முகாமின் பதிப்பு கோவையில் இருந்து 50 கி.மீ தூரத்தில் தேக்கம்பட்டியில் நிறைவடைந்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 28, 2021, 06:14 PM IST
  • கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் தொடங்கிய யானைகள் புத்துணர்வு முகாம் நிறைவு
  • தங்கள் வசிப்பிடங்களுக்கு யானைகள் கிளம்பின
  • தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் அமைச்சர்கள் யாரும் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளவில்லை
கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு முகாம் நிறைவு title=

கோவை: யானைகள் புத்துணர்வு முகாமில் புத்துணர்வு பெற்ற யானைகள் தங்களது இடத்திற்கு திரும்புகின்றன. யானைகளுக்கான 13வது புத்துணர்ச்சி முகாமின் பதிப்பு கோவையில் இருந்து 50 கி.மீ தூரத்தில் தேக்கம்பட்டியில் நிறைவடைந்தது.

பிப்ரவரி 8 ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்த 48 நாள் வருடாந்திர புத்துணர்ச்சி முகாமில்  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலிருந்து பல்வேறு கோயில்கள் மற்றும் மடங்களில் இருந்து வந்த மொத்தம் 26 யானைகள் பங்கேற்றன.

ஸ்ரீவிலிபுத்தூர் (Sriviliputhur) ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் இருந்து வந்த யானை சில நாட்களிலேயே திருப்பி அனுப்பப்பட்டது, யாருக்கும் அடங்காத அந்த யானை, யானைப் பாகன் மற்றும் அவரது  உதவியாளரை தாக்கியது.  

Also Read | முதல்வர் பழனிச்சாமி குறித்த சர்ச்சை பேச்சு; ஆ.ராசா மீது காவல் துறை வழக்குப் பதிவு

வழக்கமாக யானைகளுக்கான் புத்துணர்வு வழக்கமாக முகாமின் முடிவைக் குறிக்கும் விதமாக லாரிகளில் யானைகளை ஏற்றி அவற்றின் இடங்களுக்கு திருப்பி அனுப்பும் நிகழ்ச்சி மாநில அமைச்சர்கள் முன்னிலையில், விமரிசையாக நடைபெறும்.

ஆனால், இந்த ஆண்டு தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் அமைச்சர்கள் யாரும் முகாம் நிறைவு விழாவில் கலந்துக் கொள்ளவில்லை.  

யானைகளை திருப்பி அனுப்பும் நிகழ்ச்சியின் போது வனத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையைச் சேர்ந்த ஒரு சில அதிகாரிகள் கலந்து கொண்டனர் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

Also Read | Tiruchendur Temple பங்குனி உத்திர விழாவின் மகிமைகள் தெரியுமா?

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News