TN Election 2021: வாட்ஸ்அப் மூலம் தேர்தல் பிரசாரம் செய்யலாமா? Madras HC சொல்வது என்ன?

தமிழகத்தில் தேர்தல் பரபரப்பான கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் பிரசாரங்களும் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. வாட்ஸ்அப் மூலம் தேர்தல் பரப்புரை செய்வது தொடர்பாக மெட்ராஸ் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தின் பதிலை கோரியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 24, 2021, 06:20 PM IST
  • வாட்ஸ்அப் மூலம் தேர்தல் பிரசாரம் செய்யலாமா?
  • Madras HC சொல்வது என்ன?
  • UIDAI செல்போன் எண்களை பாஜகவுக்கு கொடுத்தது உண்மையா?
TN Election 2021: வாட்ஸ்அப் மூலம் தேர்தல் பிரசாரம் செய்யலாமா? Madras HC சொல்வது என்ன? title=

சென்னை: தமிழகத்தில் தேர்தல் பரபரப்பான கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் பிரசாரங்களும் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. வாட்ஸ்அப் மூலம் தேர்தல் பரப்புரை செய்வது தொடர்பாக மெட்ராஸ் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தின் பதிலை கோரியுள்ளது.

பாஜகவின் புதுச்சேரி பிரிவு உள்ளூர் வாக்காளர்களின் செல்போன் எண்களின் வாட்ஸ்அப் மூலம் தேர்தல் பிரசாரம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த பொது நலன் ரிட் மனுவை இந்திய ஜனநாயக இளைஞர் அறக்கட்டளையின் புதுச்சேரி பிரிவு தலைவர் ஆனந்த் தாக்கல் செய்துள்ளார். மனுவை புதன்கிழமையன்று விசாரித்த மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தாக்கல் செய்ய வேண்டும் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் விரிவான பதிலை கோரியுள்ளது.

அந்த மனுவில், உள்ளூர் பாஜக வேட்பாளர்களின் தொலைபேசி எண்களை  இந்திய தனித்துவமான அடையாள ஆணையத்திடம் (Unique Identification Authority of India) இருந்து பெற்றுக் கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | முதல் ODI போட்டியில் வென்ற இந்தியாவின் பெருமைமிகு தருணங்கள்

செல்போன் எண்களைக் கொண்டு, புதுச்சேரியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரத்துக்காக வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கியதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுல்ளது. 

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க நீதிமன்றம் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து பாஜக வேட்பாளர்களை இந்த அத்துமீறல் செயலில் ஈடுபடவிடாமல் தடுக்க வேண்டும் என்றும் பொதுநலன் மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.  

தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோரின் சட்ட அமர்வுக்கு இன்று இந்த பொது நலன் மனு வந்தது. அப்போது, இது தொடர்பாக டி.ஒய்.எஃப்.ஐ யிடம் இருந்து வந்த புகார் விசாரணைக்கு சைபர் கிரைம் செலுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
விளக்கத்தை ஏற்றுக் கொண்ட நீதிமன்ற அமர்வு, விவகாரம் தொடர்பான பதிலை வெள்ளிக்கிழமையன்று சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. 

Also Read |  தமிழக சட்டமன்ற தேர்தல் எதிரொலி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை: தேர்தல் ஆணையம்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News