TN Election 2021: தமிழக தேர்தல் பிரச்சார களத்தில், பிரதமர் மோடி, அமித்ஷா

வரும் மார்ச் 30ம் தேதி வருகை தருகிறார். தாராபுரத்தில் போட்டியிடும் பாஜக தலைவர் எல். முருகன் (L.Murugan) அவர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 24, 2021, 03:19 PM IST
  • தேர்தல் பிரச்சார களத்தில், தேசிய அளவிலான தலைவர்களும் களம் இறங்கியுள்ளனர்.
  • பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் அடுத்த கட்ட தேர்தல் பிரச்சார களத்தில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளனர்.
TN Election 2021: தமிழக தேர்தல் பிரச்சார களத்தில், பிரதமர் மோடி, அமித்ஷா title=

தமிழகத்தில் வரும் ஏப்ரம் மாதம் 6ம் தேதி சட்ட பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில், அனல பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். 

தேர்தல் பிரச்சார களத்தில், தேசிய அளவிலான தலைவர்களும் களம் இறங்கியுள்ளனர். பிரதமர் மோடி ( PM Narendra Modi), அமித்ஷா ஆகியோர் அடுத்த கட்ட தேர்தல் பிரச்சார களத்தில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளனர்.

தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி  தமிழகத்திற்கு வரும் மார்ச் 30ம் தேதி வருகை தருகிறார். தாராபுரத்தில் போட்டியிடும் பாஜக தலைவர் எல். முருகன் (L.Murugan) அவர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார்.

பின்னர் ஏப்ரல் 2ஆம் தேதி மதுரை, நாகர்கோவிலில் ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு பிரதமர் மோடி வாக்கு சேகரிக்க உள்ளார். 

உள்துறை அமைச்சர் அமித்ஷா (Amit Shah) மேற்கொள்ள உள்ள தேர்தல் சுற்று பயணத்தில், ஏப்ரல் மாதம்1ம் தேதி அரவக்குறிச்சியில், வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து பிரச்சாரம் செய்வார். மேலும் ஏப்ரல் 3ம் தேதி திருநெல்வேலியிலும், சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியிலும் பிரச்சாரம் செய்வார். 

வரும் 26ஆம் தேதி பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ( JP Nadda) , மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitaraman) ஆகியோரும் தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரிக்கான சட்டப்பேரவைத் தேர்தலும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது.  இந்நிலையில், புதுவையில் ஆட்சியைப் பிடிக்க பாஜக கூட்டணி  அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்துக்காக வரும் 30-ம் தேதி புதுச்சேரி வருகை த்ருகிறார்.

ALSO READ | அரவக்குறிச்சியில் அண்ணாமலைக்கு ஆதரவாக பிரச்சார களத்தில் எடப்பாடி பழனிச்சாமி..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News