PM Kisan திட்டத்தின் கீழ் சிறு குறு விவசாயிகளுக்கு வழங்கப்படும் 6000 (2000+2000+2000) ரூபாய் உதவித்தொகை இம்மாத 24-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் மழை பெய்து வரும் நிலையிலும் கூட மாணவர்கள் தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான தங்களின் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி மட்டுமின்றி மதுரை, கோவை, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இரவிலும், இன்று அதிகாலையிலும் மழை கொட்டி வருகிறது. ஆனால், மாணவர்கள் உற்சாகம் கொஞ்சமும் குறையாமல் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். சென்னை மெரினாவில் மாணவர்களுக்கு ஆதரவாக போராட்ட களத்தில் பங்கேற்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நாகை மாவட்டம் பழங்கள்ளிமேடு என்ற கிராமத்தைச் சேர்ந்த 180 தலித் குடும்பங்கள் மொத்தமாக இஸ்லாமுக்கு மதம் மாறப் போவதாக அறிவித்துள்ளனர். தங்களை கோவிலுக்குள் நுழைய ஜாதி இந்துக்கள் அனுமதிப்பதில்லை என்பதால் இனியும் இந்துக்களாக இருந்து எந்த பிரயோஜனமும் இல்லை. எனவே எங்களுக்கு மதிப்பு கிடைக்கக் கூடிய இஸ்லாமுக்குப் போகப் போவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.