ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தானுடன் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இலங்கை அணி, அதைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரிலும் மோத உள்ளது.
இதன் கடைசி 20 ஓவர் போட்டி அக்டோபர் 29-ம் தேதி லாகூர் கடாபி விளையாட்டரங்கில் நடைபெற ஏற்பாடாகியுள்ள இந்தப் போட்டியில் விளையாட, இலங்கை அணியை அனுப்ப சம்மதிப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்திருந்தது.
இலங்கை விழாவிற்கு செல்ல முடியாத சூழலில், அங்குள்ள ரசிகர்களுக்கு நன்றி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
இலங்கையில் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வீடு கட்டித் தரும் நிகழ்ச்சி வரும் 10-ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டது. பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான லைக்கா ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் தமிழ் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவதாக கூறப்பட்டது.
ராமேசுவரம், பாம்பன் மீனவர்கள், நாகை மீனவர்கள், ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் மொத்தம் 85 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு கடந்த 2 மாத காலமாக அங்குள்ள சிறைகளில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில் ராமேசுவரம் மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த பதற்றத்தை தணிக்கும் வகையில், இலங்கை சிறைகளில் இருந்து 85 மீனவர்களையும் விடுதலை செய்ய அந்நாட்டு அரசு முன் வந்தது.
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா ஜனவரி 26-ம் தேதிக்குள் மரணம் அடைந்து விடுவார் என்று இலங்கை ஜோதிடர் விஜிதா ரோகணா விஜேமுனி என்பவர் தெரிவித்து இருந்தார்.
இலங்கை அதிபராக மைத்ரிபால சிறிசேன விரைவில் இறந்துவிடுவார் என்பதை அந்த ஜோதிடர் பேசி, வீடியோவாக பதிவு செய்து, தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். இதுதொடர்பாக, இலங்கை ஊடகம் மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சக செயலாளர் நிமல் போபகே போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து, ஜோதிடர் விஜேமுனியை குற்ற புலனாய்வு போலீசார் கைது செய்தனர். மக்களை திசைதிருப்ப முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 51 தமிழக மீனவர்களை இன்று விடுவிக்கப்பட்டனர்.
இந்தியா - இலங்கை இடையிலான வெளியுறவுத் துறை உயரதிகாரிகள் கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன் கொழும்புவில் நடந்தது. அந்த கூட்டத்தில் மீனவர்கள் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என இந்திய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.