இறுதியாக, வந்துவிட்டது! ஜியோ தொலைபேசி பெறுவதற்கான இலவசமாக முன்பதிவு தொடங்கியது.
வரும் ஆகஸ்ட் 24 அன்று (ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் இரண்டிலும்) அதிகாரபூர்வ முன்பதிவு ஆரம்பிக்கப்பட இருக்கிறது. எனினும் சில சில்லறை விற்பனையாளர்கள் தற்போது முன்னதாகவே ஜியோ தொலைபேசி பெறுவதற்கான முன்பதிவு பெற்று வருகின்றனர்.
முன்னதாக அறிவித்தபடி ஜீயோ தொலைபேசி பெறுவதற்கான வைப்பு இருப்பு தொகையை ரூ.1,500 செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது, இந்த தொகையினை போன்-னை பெறும்போது செலுத்தினால் போதுமானது. எனவே புக்கிங் நேரத்தில் முழுத் தொகையும் செலுத்த வேண்டிய அவசியமில்லை.
MI நிறுவனம் தனது புதிய வரவான MI Max 2 -வினை கடந்த செவ்வாயன்று புது டெல்லியில் வெளியிட்டது. MI நிறுவனத்துடன் இணைந்து அம்பானியின் ரிலைன்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக 100GB 4G டேட்டாவினை வழங்கவுள்ளது. இதன்படி MI Max 2 -னை வாங்கும் புதிய வடிகையலர்கள் மொபைலுடன் இலவசமாக 100GB 4G ரிலைன்ஸ் ஜியோ டேட்டாவினை பெறலாம்.
ஏர்செல் நிறுவனம் புதிய சலுகைகளுக்கான அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோவின் அதிரடியால் டெலிகாம் முன்னணி நிறுவனங்கள் தொடர்ந்து புதிய திட்டங்களை அறிவித்து வருகின்றன. ஜியோவின் ‘தண் தணா தண்’ சலுகை (84 நாள் வேலிடிட்டி) இம்மாதத்துடன் நிறைவு பெறுகிறது. எனவே, ஜியோ தனது சேவைகளின் விலையை சமீபத்தில் மாற்றியமைத்தது.
ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் தனியார் இணையதளம் ஒன்றில் வெளியானதாக புகாரின் பெயரில் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவரை மராட்டிய போலீஸார் கைது செய்தனர்.
மிக குறைந்த கட்டணத்தில் டேட்டா வழங்கியது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். இதனால் மற்ற நிறுவனங்களும் சலுகைகளை அள்ளி வழங்கின. ஜியோ அறிவித்த குறைந்த விலையில் 4ஜி டேட்டா திட்டத்தால் ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தன.
ஏப்ரம் மாதத்தில் முதல் ரிலையன்ஸ் ஜியோ ‘தண் தணா தண்’ என்னும் சலுகையை 3 மாதத்திற்கு வழங்கியது. இந்த ‘தண் தணா தண்’ சலுகை இம்மாதத்துடன் நிறைவு பெறுகிறது.
இந்நிலையில் ஜியோவின் அடுத்த கட்டண பட்டியல் வெளியாகியுள்ளது. விவரங்கள் வருமாறு:-
ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு:-
ஏப்ரம் மாதத்தில் முதல் ரிலையன்ஸ் ஜியோ ‘தண் தணா தண்’ என்னும் சலுகையை மூன்று மாதத்திற்கு வழங்கியது. இந்த ‘தண் தணா தண்’ சலுகை (84 நாள் வேலிடிட்டி) இம்மாதத்துடன் நிறைவு பெறுகிறது.
ரிலையன்ஸ் ஜியோவின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 4ஜி வோல்ட்இ மொபைல் போன் விரைவில் வெளியிடப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில்
ஜூலை 21-ம் தேதி நடைபெற இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் புதிய மொபைல் போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மொபைல் போனுடன் அட்டகாச விலையில் சலுகை திட்டங்களும் அறிவிக்கப்படலாம்.
ரிலையன்ஸ் ஜியோவின் இலவச சேவை மார்ச் 31-ம் தேதியுடன் முடிகிறது. இதற்குப் பிறகு, ஜியோ கட்டண சேவை தொடங்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோவின் இலவச சேவை ஏப்ரல் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை 7.2 கோடி வாடிக்கையாளர்கள் ஜியோவில் கட்டணம் செலுத்தி உறுப்பினர்கள் ஆகியுள்ளனர். இந்நிலையில், ஜியோவில் ரூ.99 செலுத்தி பிரைம் உறுப்பினர் அவதற்கான கால அவகாசம் ஏப்ரல் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.
ஜியோ சிம் கார்டு வைத்துள்ளவர்கள் பிரைம் திட்டத்தில் சேர்ந்து வருகின்றனர். இவர்களுக்கான இலவச சேவை சலுகை வரும் மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் புதிய சலுகையை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
* ரூ.149 பிரீபெய்டு திட்டத்தின் கீழ் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு 2ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படும்.
* ரூ.303க்கு ரீசார்ஜ் செய்யபவர்களுக்கு, 5 ஜிபி கூடுதல் டேட்டா வழக்கப்படும்.
ரிலையன்ஸ் ஜியோவின் இலவச சேவை தற்போது 100 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கடந்து விட்டது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது
இந்தியாவின் தொலை தொடர்பு ஜாம்பவான் முகேஷ் அம்பானி இலவச டேட்டா மற்றும் ப்ரீ வாய்ஸ் வசதிகளுடன் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஜியோ சேவையை அறிமுகப்படுத்தினார். துவக்கத்தில் மூன்று மாத இலவச சேவை வழங்கிய ஜியோ நிறுவனம் பின்னர் இந்த சேவையை 6 மாதங்களுக்கு நீட்டித்தது. ஆனால், இலவச டேட்டாவை அளிப்பை குறைத்தது. முதலில் 4GB அளித்து பின்னர் 1GB என்று குறைத்தது. கடந்த செப்டம்பர் 1-ம் தேதி இந்த இலவச திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
ரிலையன்ஸ் ஜியோ 600ஜிபி ரூ 500 -க்கு வழங்க திட்டமிட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு 15Mbps வேகத்தில் இருக்கும்.
ரிலையன்ஸ் மும்பை, புனே மற்றும் சென்னை உள்ளிட்ட 100 நகரங்களில் ஃபைபர்-டு-ஹோம் (FTTH) சேவை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ சேவை திட்டங்கள் 3 முக்கிய பிரிவுகளாக வழங்கப்படுகிறது:
ரிலையன்ஸ் தனது கவர்ச்சிகரமான ஜியோ சேவையை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. "டேட்டா" அல்லது "வாய்ஸ் கால்" இரண்டில் ஒன்றிற்கு மட்டும் கட்டணம் செலுத்தும் புதிய முறையை ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்துவதாக முகேஷ் அம்பானி மும்பையில் அறிவித்தார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் ரிலையன்ஸ் ஜியோ விரைவில் வர்த்தக ரீதியில் 4ஜி இண்டர்நெட் சேவையை துவங்க உள்ளது. தற்போது முதற்கட்டமாக 90 நாட்களுக்கு இலவசமாக அன்லிமிடெட் 4ஜி இண்டர்நெட் ஆஃபரையும் ஜியோ வழங்கி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.