‘ஏர்செல்’ புதிய சலுகை அறிவிப்பு - பார்க்க

Last Updated : Jul 14, 2017, 02:20 PM IST
‘ஏர்செல்’ புதிய சலுகை அறிவிப்பு - பார்க்க title=

ஏர்செல் நிறுவனம் புதிய சலுகைகளுக்கான அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோவின் அதிரடியால் டெலிகாம் முன்னணி நிறுவனங்கள் தொடர்ந்து புதிய திட்டங்களை அறிவித்து வருகின்றன. ஜியோவின் ‘தண் தணா தண்’ சலுகை (84 நாள் வேலிடிட்டி) இம்மாதத்துடன் நிறைவு பெறுகிறது.  எனவே, ஜியோ தனது சேவைகளின் விலையை சமீபத்தில் மாற்றியமைத்தது. 

இதை அடுத்து தற்போது ஏர்செல் நிறுவனம் புதிய சலுகைகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா என மொத்தம் 84 ஜிபி டேட்டா வழங்கப்படும். இதற்கான வேலிடிட்டி 84 நாள் ஆகும். மேலும் அனைத்து வகையான வாய்ஸ் கால்கள்(லோக்கல், எஸ்.டி.டி.) அன்லிமிட்டெட் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.348 ஆகும். 

ஏர்செல்லின் புதிய சலுகை உத்திரப்பிரதேச மாநிலத்தின் சில(கிழக்கு) பகுதிகளில் மட்டும் தற்போது வழங்கப்படுகிறது. 

Trending News