காஷ்மீரின் குல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாரும், பாதுகாப்பு படையினரும் இணைந்து இன்று அதிகாலை முதல் வீடு வீடாக சோதனை நடத்தி வந்தனர்.
காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் பகுதியில் கடந்த மாதம் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் முக்கிய தலைவர் பர்கான் வானி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தால் கடந்த மாதம் 9-ம் தேதி முதல் காஷ்மீரில் பிரிவினைவாதிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 70 பேர் இறந்ததுள்ளனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
குப்வாரா மாவட்டத்தில் உள்ள கர்னா பகுதியில் பாதுகாப்பு படையினர் முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். இருதரப்பு இடையே சண்டை நடைபெற்று வருகிறது. பயங்கரவாதிகள் திடீரென நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் மூவர் காயம் அடைந்து உள்ளனர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.