52 நாட்களுக்கு பிறகு காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு நீக்கம்

Last Updated : Aug 29, 2016, 10:46 AM IST
52 நாட்களுக்கு பிறகு காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு நீக்கம் title=

காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் பகுதியில் கடந்த மாதம் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் முக்கிய தலைவர் பர்கான் வானி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தால் கடந்த மாதம் 9-ம் தேதி முதல் காஷ்மீரில் பிரிவினைவாதிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 70 பேர் இறந்ததுள்ளனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பல இடங்களில் தடை உத்தரவு விலக்கி கொள்ளப்பட்டது. எனினும் மக்கள் பொது இடங்களில் அதிக அளவில் கூட அனுமதிக்கப்படவில்லை. அதே சமயம் ஷெகர் இ காஸ், புல்வாமா, பாம்போர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து தடை உத்தரவு நீடித்து வருகிறது. 

இந்த நிலையில், 52-வது நாளான இன்று காஷ்மீரில் பெரும்பாலான இடங்களில் ஊரடங்கு உத்தரவு விலக்கி கொள்ளப்பட்டது. புல்வாமா மாவட்டம் மற்றும் ஸ்ரீநகரின் ஒரு சில இடங்களை தவிர்த்து ஏனைய இடங்களில் ஊரடங்கு உத்தரவு விலக்கி கொள்ளப்பட்டது. 

Trending News