FAU-G ஜனவரி 26 அன்று தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டை இந்திய நிறுவனமான nCore Games தயாரித்துள்ளது. சமீபத்தில், நடிகர் அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த மொபைல் விளையாட்டைப் பற்றி அறிவித்தார்.
பெங்களூரை சேர்ந்த என்கோர் கேம்ஸ் நிறுவனம் உருவாக்கி வரும் பாஜி கேம் டிரெயிலர் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்தியாவில் இந்த கேம் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
PUBGக்கு தடை விதிக்கப்பட்ட பின்னர், அந்த விளையாட்டு இன்னும் பிரபலமடைந்து விட்டது போல் தெரிகிறது, அதன் மறுபிரவேசம், குறிப்பாக வெளியீட்டு தேதி மற்றும் விளையாட்டில் ஏதேனும் மாற்றங்கள் குறித்த விவரங்கள் வெளியானால் உடனே அவை வைரலாகின்றன.
இந்தியாவில் PUBG ஐ இந்தியா தடை செய்திருந்தாலும், இந்தியாவில் PUBG Mobile India விளையாட்டு செயலி எப்போது தொடங்கப்படுகிறது என்பது குறித்து எந்த தெளிவும் இல்லை. ஆனால், பிரபலமான யுத்த விளையாட்டுகளுக்கான ஆவல் துளி கூட குறையவில்லை.
PlayerUnknown’s Battlegrounds எனப்படும் மிகவும் பிரபலமான PUBG மொபைல் செயலி உட்பட 118 சீன செயலிகளை நரேந்திர மோடி தலைமையிலான அரசு செப்டம்பர் மாதம் தேசிய பாதுகாப்புக் காரணங்களுக்காக தடை செய்தது.
அண்ட்ராய்டு மற்றும் iOS க்கான பப்ஜி மொபைல் இந்தியாவின் முன் பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த பதிவு டாப் டாப் (Tap Tap ) கேம் ஷேரிங் கம்யூனிட்டி பயனர்களுக்காக மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது. இந்த செயலிக்காக ஏற்கனவே 3 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள் பதிவு செய்துள்ளனர்.
புதிய அவதாரத்தில் இந்தியாவுக்கு மீண்டும் வருகிறது PUBG. இதற்கான புதிய நேரக் கட்டுப்பாடுகள், புதிய தோற்ற, தரவு பாதுகாப்பு பற்றி அனைத்தையும் அறிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் பப்ஜி விளையாட்டு தடை செய்யப்பட்டு ஏறக்குறைய ஒரு மாதத்திற்குப் பிறகு, PUBG மொபைல் இந்தியாவுக்கு திரும்புவதை உறுதியாகியுள்ளது. PUBG மொபைல் இந்தியாவில் திரும்புவதாக PUBG கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. இந்திய பயனர்களுக்காக ஒரு சிறப்பு விளையாட்டு தொடங்கப்படும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
PUBG உள்ளிட்ட பல செயலிகளை தடை செய்வததன் பின்னணி காரணம் பயன்படுத்துபவர்களின் தரவு பாதுகாப்பு என்று கூறப்பட்டது. உண்மையில் இது மிகப்பெரிய காரணம். இந்த சிக்கலை தீர்ப்பதற்காக PUBG இப்போது தனது தரவு சேவையகத்தை இந்தியாவில் நிறுவ முடிவு செய்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.