PUBG Mobile India: புதிய அம்சங்கள், வெளியீட்டு தேதி, விரிவாக்க திட்டம்

PUBGக்கு தடை விதிக்கப்பட்ட பின்னர், அந்த விளையாட்டு இன்னும் பிரபலமடைந்து விட்டது போல் தெரிகிறது, அதன் மறுபிரவேசம், குறிப்பாக வெளியீட்டு தேதி மற்றும் விளையாட்டில் ஏதேனும் மாற்றங்கள் குறித்த விவரங்கள் வெளியானால் உடனே அவை வைரலாகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 7, 2020, 03:55 PM IST
  • PUBG Mobile India புதிய அம்சங்களுடன் வெளிவரும்
  • விளையாட்டை மேலும் விரிவாக்க திட்டம்
  • இந்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறது பப்ஜி
PUBG Mobile India: புதிய அம்சங்கள், வெளியீட்டு தேதி, விரிவாக்க திட்டம்  title=

PUBGக்கு தடை விதிக்கப்பட்ட பின்னர், அந்த விளையாட்டு இன்னும் பிரபலமடைந்து விட்டது போல் தெரிகிறது, அதன் மறுபிரவேசம், குறிப்பாக வெளியீட்டு தேதி மற்றும் விளையாட்டில் ஏதேனும் மாற்றங்கள் குறித்த விவரங்கள் வெளியானால் உடனே அவை வைரலாகின்றன.

PUBG மொபைல் என்பது இந்தியாவில் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றாகும். மிகவும் பிரபலமான இந்த விளையாட்டு, பல சீன செயலிகள் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட போது தடை செய்யப்பட்டது. ஆனால் PUBGக்கு தடை விதிக்கப்பட்ட பின்னர், அந்த விளையாட்டு இன்னும் பிரபலமடைந்து விட்டது போல் தெரிகிறது, அதன் மறுபிரவேசம், குறிப்பாக வெளியீட்டு தேதி மற்றும் விளையாட்டில் ஏதேனும் மாற்றங்கள் குறித்த விவரங்கள் வெளியானால் உடனே அவை வைரலாகின்றன.

இந்திய பார்வையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட புதிய அவதாரத்தில் PUBG கார்ப்பரேஷன் மீண்டும் களம் இறங்குவதாக தீபாவளியின்போது அறிவித்திருந்தது. அப்போதிருந்து, போர் ராயல் கேம் பற்றி பல செய்திகள் வெளிவந்தாலும், அதன் வெளியீட்டு தேதியை எதுவுமே உறுதிப்படுத்தவில்லை.

தீபாவளி திருவிழா (Diwali) காலத்தில் சமூக ஊடகங்கள் மூலம் இந்தியாவில் திரும்புவதாக PUBG கார்ப்பரேஷன் அறிவித்ததை அடுத்து நாட்டின் மில்லியன் கணக்கான மொபைல் விளையாட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.  

இந்த விளையாட்டு நவம்பர் 13 ஆம் தேதி இந்திய சந்தைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது, ஆனால் அந்த நாள் விளையாட்டு வெளியிடப்படவில்லை.

Also Read | FAU-G விளையாடத் தயார்! முன்பதிவு செய்வது எப்படி? Tips இதோ...

புதிய PUBG மொபைல் இந்தியா அம்சங்கள்:

உத்தியோகபூர்வ அறிவிப்பு விளையாட்டின் மறுபிரவேசத்தை உறுதிப்படுத்தியது மட்டுமல்லாமல், இது ஒரு பெரிய மாற்றத்துடன் லேட்டஸ்டாக வரவிருப்பதையும் உறுதிப்படுத்தியது. குறிப்பிடத்தக்க வகையில், PUBG மொபைல் இந்தியா, கொரிய பதிப்பில் இருக்கும் green bloodstain என்ற அம்சமும் புதிய பதிப்பில் இருக்கும்  என்று கூறுகிறது. விளையாட்டின் புதிய பதிப்பில், வயதுக்குட்பட்ட வீரர் தளம் சுகாதார நலனை உறுதி செய்வதற்கான கால வரம்பையும் எதிர்கொள்ளும். நிறுவனம் பயனர் இடைமுகத்தை மாற்றவும் திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமல்ல, வழக்கமான பின்னணி மெய்நிகர் (virtual simulation)உருவகப்படுத்துதல் பயிற்சி மைதானமாக மாற்றப்படும்.

கிராப்டன் (Krafton) 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை PUBG மொபைல் இந்தியாவில் முதலீடு (investment) செய்ய திட்டமிட்டுள்ளது

இந்தியாவில் தனக்கென ஒரு நிலையான எதிர்காலத்தை உறுதி செய்து கொள்வதற்காக PUBG மூலம் கிராஃப்டன் இந்தியாவுக்குள் நுழைய திட்டமிட்டுள்ளது. வீடியோ கேம்(video game), ஸ்போர்ட்ஸ் (esports), ஐடி (IT) மற்றும் பொழுதுபோக்குத் தொழில்களின் வளர்ச்சிக்கு பங்களிக்க கிராப்டன் இந்தியாவில் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்வதாகவும் அறிவித்துள்ளது. கிராப்டன் இந்தியாவில் ஒரு கிளை அலுவலகத்தை அமைத்து விளையாட்டு மேம்பாடு, வணிகம் மற்றும் விளையாட்டு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற சுமார் 100 பேரை வேலைக்கு அமர்த்துவதாகவும் அறிவித்துள்ளது.

Also Read | Best Apps of 2020: 2020 ஆம் ஆண்டின் சிறந்த ஆண்ட்ராய்டு App & Games எது?

PUBG மறுதொடக்கம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் 
PUBG இந்தியா சில டீஸர்களை வெளியிட்டது. அந்த தொடர் டீஸர்களில் PUBG மொபைல் சமூகத்தைச் சேர்ந்த சில முக்கிய முகங்களைக் காட்டியது, இது நவம்பர் 20 க்குள் இந்தியாவில் விளையாட்டு திரும்பக்கூடும் என்ற ஊகங்களுக்கு வழிவகுத்தது.

PUBG மொபைலில் இருந்து தரவு PUBG மொபைல் இந்தியா சேவையகங்களுக்கு மாற்றப்படுவதாகக் கூறி பயனர்களுடன் பல கிளிப்புகள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டன. தங்கள் பழைய தரவுகளை மாற்றிக் கொள்ள முடிந்தால் சிக்கல்கள் தீரும் என்று பப்ஜி பிரியர்கள் ஆசைப்படுகின்றனர். அது சாத்தியமானால், அவர்கள் தங்கள் பழைய கணக்குகளை எந்த பிரச்சனையும் இல்லாமல் அணுகமுடியும்.

ஆனால் சமீபத்தில் கிடைத்த தகவல்களின்படி இந்தியாவில் PUBG ஐ மீண்டும் தொடங்குவதற்கு மத்திய அரசு இதுவரை ஒப்புதல் ஏதும் அளிக்கவில்லை. PUBG கார்ப்பரேஷனின் அதிகாரிகள், இந்திய அரசு அதிகாரிகளை சந்திக்க காத்திருக்கிறார்கள் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Also Read | FAU-G vs PUBG: இரண்டு விளையாட்டுகளுக்கும் இடையிலான 5 வித்தியாசங்கள்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 
 

Trending News