PUBG Mobile கேம் மீண்டும் இந்தியாவுக்குள்? Airtel நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை: அறிக்கை

பப்ஜி மொபைல் விளையாட்டை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்காக PUBG கார்ப்பரேஷன் (PUBG Corporation) ஏர்டெலுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 9, 2020, 02:30 PM IST
  • பப்ஜி மொபைல் விளையாட்டை மீண்டும் இந்தியாவுக்குல் நுலையலாம்.
  • ஏர்டெலுடன் PUBG கார்ப்பரேஷன் பேச்சுவா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
  • PUBG Mobile உட்பட 117 பிற சீன பயன்பாடுகளை சில மாதங்களுக்கு முன்பு இந்திய அரசு தடை செய்தது
PUBG Mobile கேம் மீண்டும் இந்தியாவுக்குள்? Airtel நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை: அறிக்கை title=

Tech News: PUBG Mobile உட்பட 117 பிற சீன பயன்பாடுகளை சில மாதங்களுக்கு முன்பு இந்திய அரசு தடை செய்தது. ஆனால் இப்போது தென் கொரிய நிறுவனமான PUBG கார்ப்பரேஷன் இந்தியாவில் பப்ஜி விளையாட்டை (PUBG Game)  மீண்டும் கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வந்துள்ளன. முதலில் தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் இப்போது ஏர்டெல் உடனான பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளிவருகின்றன.

என்ட்ராக்ரின் (Entrackr's) அறிக்கையின்படி, பப்ஜி மொபைல் விளையாட்டை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்காக PUBG கார்ப்பரேஷன் (PUBG Corporation) ஏர்டெலுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இரு நிறுவனங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் தற்போது ஆரம்ப கட்டத்தில் உள்ளன. இந்தியாவில் 4 முதல் 6 ஆண்டுகள் அனுபவம் உள்ள பணியாளர்களை PUBG நேர்காணல் செய்து வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், பப்ஜி  விளையாட்டு கூகிள் பிளே ஸ்டோர் (Google Play) அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோருக்கு (Apple App Store) மீண்டும் திரும்புமா என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. எப்போது வேண்டுமானாலும், PUBG Mobile கேம் திரும்பும் எனத் தெரிகிறது.

ALSO READ |  PUBG உள்ளிட்ட 118 மொபைல் செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிப்பு: மத்திய அரசு

அதாவது, தற்போது இந்த விஷயத்தில் PUBG அல்லது Airtel தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடப்படவில்லை என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம். 

PUBG Mobile விளையாட்டு சீனா நாட்டை சேர்ந்தது இல்லை: 
இந்தியாவில் PUBG மொபைல் தடை செய்யப்பட்டதை அடுத்து தென் கொரிய நிறுவனமான PUBG கார்ப்பரேஷன் சீன நிறுவனமான டென்செண்டுடன் கூட்டு சேர்ந்து இருந்ததை விலகி கொண்டது. அதாவது சீன நிறுவனமான டென்சென்ட் பொது உரிமைகளை ரத்து செய்ததாகக் கூறப்பட்டது.

ALSO READ |  PUBG விளையாட தொல்லையா இருந்த தந்தையின் தலையை வெட்டிய மகன்!

தென் கொரிய வீடியோ கேம் நிறுவனமான கிராப்டன் கேம் யூனியனின் ஒரே துணை நிறுவனம் PUBG கார்ப்பரேஷன் என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம். இந்த நிறுவனம் PUBG இன் டெவலப்பர், வெளியீட்டாளர் மற்றும் இந்த விளையாட்டு தென் கொரியாவில் உருவாக்கப்பட்டது. சீன நிறுவனமான டென்சென்ட் கேம்ஸுக்கு விளையாட்டின் விநியோகம் மட்டுமே வழங்கப்பட்டது.

ரிலையன்ஸ் ஜியோவுடன் பேச்சுவார்த்தை:
சில நாட்களுக்கு முன்பு இந்து பிசினஸ் லைன் அறிக்கை ஒன்று, இந்தியாவில் பீட்டல் ராயல் விளையாட்டு "பப்ஜி மொபைல்"ஐ மீண்டும் கொண்டுவருவதற்காக ரிலையன்ஸ் ஜியோவுடன் PUBG கார்ப்பரேஷன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறியது.

ALSO READ |  PUBG விளையாட்டில் வெற்றிப் பெற்றால் ₹1 கோடி வரை பரிசு!

சீன பயன்பாடுகளுக்கு ஏன் தடை விதிக்கப்பட்டது?
இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, அரசின் பாதுகாப்பு மற்றும் அமைதி ஆகியவற்றுக்கு அச்சுறுத்தலாக இருந்த தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 69 ஏ இன் கீழ் சீன பயன்பாடுகள் தடை செய்யப்பட்டன.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News