ராஜீவ் காந்தி கொலை வழக்கில், தமிழர்கள் என்பதற்காக விடுதலை செய்யவேண்டும் என்றால் அது முறையாகாது என உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்திருந்தார்.
31 ஆண்டு கால சட்டப்போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி விழுந்தது என தமிழக மக்கள் பேரறிவாளனின் விடுதலையை கொண்டாடி வரும் நிலையில், அதற்கு எதிர்ப்புகளும் பதிவாகி வருகிறது.
பேரறிவாளன் விடுதலை தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ள நிலையில், காங்கிரஸ் சார்பில் பேரறிவாளன் விடுதலைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
31 ஆண்டு கால சட்டப்போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி விழுந்தது என தமிழக மக்கள் பேரறிவாளனின் விடுதலையை கொண்டாடி வரும் நிலையில், அதற்கு எதிர்ப்புகளும் பதிவாகி வருகிறது.
பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை கண்டித்து சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் கருப்புத் துணியை கண் மற்றும் வாயில் கட்டி காந்தி சிலை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை காலை 10 மணிக்கு போராட்டம் நடக்குமென காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.
பேரறிவாளன் விடுதலையை ஏற்றுக்கொள்வதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ள நிலையில், பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் பேரறிவாளனின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.