முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் கைது செய்யப்பட்டு 30 வருடங்களுக்கும் மேலாக சிறையில் இருந்தார். அவரை விடுதலை செய்யக்கோரி அவரது தாய் அற்புதம்மாள் பல காலம் சட்டப்போராட்டம் நடத்திவந்தார். தமிழ்நாடு அமைச்சரவையும் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைத்தது.
ஆனால் அந்தத் தீர்மானத்தின் மீது பல மாதங்களாக ஆளுநர் பாராமுகத்துடன் இருந்தார். இதனால் பேரறிவாளின் விடுதலை தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. ஆளுநரின் இந்த மெத்தனத்திற்கு தமிழ்நாட்டு அரசியல் கட்சியினர் முதல் சாமானியர்கள்வரை கண்டனம் தெரிவித்தனர்.
இந்தச் சூழலில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுவிக்க கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு பேரறிவாளனை முழுமையாக விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இதன்மூலம் பல வருட காத்திருப்பு முடிவுக்கு வந்திருக்கிறது.
இந்நிலையில் வழக்கு தீர்ப்பை கேட்டபோது பேரறிவாளன் ஆனந்த கண்ணீர் வடித்தார். அவரை அணைத்துக்கொண்டு ஆனந்த கண்ணீர் விட்டவர்களையும் அவர் தேற்றினார்.
வழக்கிலிருந்து, நிச்சயம் விடுதலை அடைவோம் என்ற நம்பிக்கை பேரறிவாளனுக்கு ஆழமாகவே இருந்திருக்கிறது. அதனால் இந்தத் தீர்ப்பில் அவர் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை என பலர் கூறுகின்றனர்.
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் விடுதலை பெற்றிருக்கும் பேரறிவாளனுக்கு பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்து தீர்ப்பின்போது பேரறிவாளன் ரியாக்ஷன் வீடியோவை அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.
மேலும் படிக்க | Live Update: இன்றைய முக்கிய செய்திகள் (மே 18, 2022)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!