பாட்னா உயர்நீதிமன்றம், ஜனதா தளம் (ஐக்கிய) - பாரதிய ஜனதா கட்சிகள் இனைந்து புதிய பீகார் அரசாங்கத்தை உருவாக்கியதற்கு எதிராக, ராஷ்டிரிய ஜனதா தளம் தொடுத்த மனுவை தள்ளுபடி செய்தது.
ஜூலை 28 ம் தேதி வெள்ளிக்கிழமை ராஷ்டிரிய ஜனதா தளம் சட்டமன்ற உறுப்பினர் சரோஜ் யாதவ் மனு தாக்கல் செய்தார். பாட்னா உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மனுவை ஏற்றுக்கொண்டது, ஆனால் நிதீஷ் குமாரின் தரப்பில் சோதனைக்கு உட்படுத்தபட்டு பின்னர் மறுத்துவிட்டது, ஜூலை 31 க்கு முன்னர் விசாரணையின் சாத்தியம் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள சஹார்சா மாவட்டத்திலிருந்து தலைநகர் பாட்னாவுக்கு செல்ல வேண்டிய சஹார்சா - பாட்னா ராஜ்ய ராணி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை சஹார்சா ரயில் நிலையத்தின் 2வது நடைமேடைக்குள் நுழைந்தபோது இரு பெட்டிகளின் சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு விலகியதால் பெட்டிகளும் பக்கவாட்டில் கவிழ்ந்தன.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால், அந்த பாதையை கடந்து செல்ல வேண்டிய ரெயில் சேவைகள் சுமார் மூன்று நேரத்துக்கு பாதிக்கப்பட்டது.
கவிழ்ந்த பெட்டிகளை நிமிர்த்தி இணைத்த பின்னர் காலை 9.30 மணியளவில் அந்த ரயில் பாட்னாவுக்கு புறப்பட்டு சென்றது.
பீகார் தலைநகர் பாட்னாவிற்கு அருகில் உள்ள கங்கை நதி பகுதியில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. மகர சங்கிராந்தி விழாவை கொண்டாடி விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை சுமார் 23 ஆக உயர்ந்துள்ளது. படகில் சுமார் 40 பேர் பயணம் செய்ததாக தெரிகிறது. மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.