பீகார் மாநிலத்தில் உள்ள சஹார்சா மாவட்டத்திலிருந்து தலைநகர் பாட்னாவுக்கு செல்ல வேண்டிய சஹார்சா - பாட்னா ராஜ்ய ராணி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை சஹார்சா ரயில் நிலையத்தின் 2வது நடைமேடைக்குள் நுழைந்தபோது இரு பெட்டிகளின் சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு விலகியதால் பெட்டிகளும் பக்கவாட்டில் கவிழ்ந்தன.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால், அந்த பாதையை கடந்து செல்ல வேண்டிய ரெயில் சேவைகள் சுமார் மூன்று நேரத்துக்கு பாதிக்கப்பட்டது.
கவிழ்ந்த பெட்டிகளை நிமிர்த்தி இணைத்த பின்னர் காலை 9.30 மணியளவில் அந்த ரயில் பாட்னாவுக்கு புறப்பட்டு சென்றது.