காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு தற்காலிகமானது அல்ல, இந்நிலையில் குடியரசுத் தலைவர் பிறப்பித்திருக்கும் உத்தரவு அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்!
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது மத்திய அரசின் கம்பீரத்தை காட்டுகிறது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.
ஜம்முவில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. அதன் காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் கூடுதலாக 10 ஆயிரம் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஜம்மு - காஷ்மீரில் அனைத்து கட்சிகளும் ஒன்று கூட வேண்டும் என மெகபூபா முக்தி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.