கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்றுநோயால் மார்ச் மாதத்திலிருந்து நாடு ஊரடங்கு செய்யப்பட்ட நிலையில் இருந்து, வரி (Tax) மற்றும் தபால் அலுவலகம் (Post Office) தொடர்பான முதலீட்டுத் திட்டங்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்கியுள்ளது.
தங்கம் என்றாலே அனைவரின் முகமும் புன்சிரிப்பால் விரியும். அதிலும் பெண்களுக்கு பொன்னகைப் போட்டால் புன்னகை முகத்தில் விரியும். ஆனால், கடந்த நான்கு மாதங்களில் மட்டும் ஆபரண தங்கம் விலை மிகவும் அதிகரித்துள்ளது. எப்போதும் இல்லாத வகையில், தற்போது ஒரு சவரன் தங்கத்தின் விலை, 37 ஆயிரம் ரூபாயை தாண்டிவிட்டது.
பொது வருங்கால வைப்பு நிதி (PPF) நீண்டகால முதலீட்டு கருவிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஒரு PPF கணக்கு வைத்திருப்பவர் பழைய வருமான வரி அடுக்குகளைத் தேர்ந்தெடுத்திருந்தால், வருமான வரிச் சட்டம் 1961-ன் பிரிவு 80C -ன் கீழ் பொது வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்ய வரி விலக்கு கோருவதற்கு அது உதவியாக இருக்கும்.
கார்ப்பரேட் வருமான வரியைக் குறைப்பதற்கான இந்தியாவின் சமீபத்திய முடிவை சர்வதேச நாணய நிதியம்(IMF) வெள்ளிக்கிழமை ஆதரித்தது, இது முதலீட்டில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவின் வளர்ச்சியை 8 சதவிகிதத்திற்கு மேல் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா நாட்டின் ஜோகன்ஸ்பெர்க்கில், இந்திய வம்சாவளியினரிடையே பேசிய அவர், உலக பொருளாதாரம் மந்தமாக இருக்கிற போதிலும் இந்தியாவின் வளர்ச்சி 7 புள்ளி 6 சதவிகிதமாக இருப்பதாக தெரிவித்தார். வரும் ஆண்டுகளில் அதனை 8 சதவிகிதத்திற்கு மேல், அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மோடி குறிப்பிட்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.