COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஒரு குறிப்பிட்ட மருந்து பயன்படுத்தப்படலாம் என்ற கூற்றுப்படி, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு புதிய பிரதிநிதித்துவத்தை வழங்குமாறு மெட்ராஸ் உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தமிழ்நாட்டில் உள்ள ஒரு மருத்துவருக்கு உத்தரவிட்டது.
கொரோனா வைரஸ் நோய் (COVID-19) காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை வெள்ளிகிழமை ஒரே நாளில் 300-ஆக பதிவு செய்தது இந்தியா. இது இதுவரை இல்லாத அளவிற்கான உச்ச குறியீடு ஆகும்.
இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1.4 லட்சத்தை எட்டியுள்ளது, திங்களன்று ஏழாயிரம் பேருக்கு புதிதாக தொற்று பரவியிருக்கிறது. எண்ணிக்கை துரிதமாக அதிகரிப்பு குறித்து கவலைப்படக்கூடாது என்று கான்ட் கூறுகிறார். எண்களை பார்த்து கவலையடைவதை விட, பலவீனமான குழுக்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துவது உகந்தது.
ஹர்ஷ் வர்தன் அனைத்து மாநிலங்களுக்கும், UT-களுக்கும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடை செய்ய வேண்டும், பொது இடங்களில் எச்சில் துப்புபவர்களுக்கு அபராதம் விதிக்கவேண்டும்!!
இந்தியாவில் COVID-19-ஐக் கண்டறிவதற்காக நடத்தப்பட்ட RT-PCR சோதனையின் எண்ணிக்கை சனிக்கிழமையன்று ஒரு மில்லியனைத் தாண்டியது என ICMR அதிகாரிகள் தெரிவித்தனர், இதில் மொத்தம் 37,776 நாவல் கொரோனா வைரஸ் தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று மாதங்களுக்கு முன்பு, முதன்முதலாக தொடங்கிய சோதனை, இன்று ஒரே நாளில் 72,000 பேருக்கு சோதனைகளை நடத்தினோம். இது கணிசமாக அதிக எண்ணிக்கையாகும். ஒரு நாளைக்கு 1.25 லட்சம் வரை சோதனைகளை அதிகரிக்கும் நிலையில் இந்தியா உள்ளது.
கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க செயல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு காலத்தில் 72 நாடுகளைச் சேர்ந்த சுமார் 60 ஆயிரம் வெளிநாட்டினர் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லியின் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (IIT) உருவாக்கியுள்ள COVID-19 சோதனை கருவிக்கு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வௌவால்களுக்கு கொரோனா தொற்று இருப்பதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உறுதி செய்துள்ளது!!
கர்ப்பிணித் தாயிடமிருந்து புதிதாகப் பிறந்த குழந்தைக்கும் கொரோனா வைரஸ் பரவக்கூடும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) திங்களன்று தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.