IIT மாணவர்கள் உருவாக்கிய COVID-19 சோதனை கருவிக்கு ICMR ஒப்புதல்...

டெல்லியின் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (IIT) உருவாக்கியுள்ள COVID-19 சோதனை கருவிக்கு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) ஒப்புதல் அளித்துள்ளது.

Last Updated : Apr 25, 2020, 09:14 AM IST
IIT மாணவர்கள் உருவாக்கிய COVID-19 சோதனை கருவிக்கு ICMR ஒப்புதல்... title=

டெல்லியின் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (IIT) உருவாக்கியுள்ள COVID-19 சோதனை கருவிக்கு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து IIT பேராசிரியர் பெருமாள் தெரிவிக்கையில்., "ஜனவரி மாத இறுயில் இந்த கருவியை தயாரிப்பதற்கான பணியை நாங்கள் துவங்கினோம். மூன்று மாதங்களில் தற்போது இந்த கருவியை தயார் செய்துள்ளோம். தற்போது சந்தையில் உள்ள கொரோனா சோதிப்பு கருவிகளை காட்டிலும் இந்த கருவி மிகவும் மளிவானது. இந்த கருவி ஒரு துணியால் பரிசோதிக்கும் கருவி ஆகும்" என்று தெரிவித்துள்ளார்.

READ | சென்னையில் வலம் வரும் கொரோனா ஆட்டோ; வைரலாகும் புகைப்படங்கள்...

"தற்போதுள்ள சாதனங்களில் மேற்கொள்ளப்படும் சோதனைக்கு ஆகும் செவை விட இந்த கருவியில் செய்யப்படும் சோதனைக்கு குறைந்த அளவே செலவாகும்" எனவும் அவர் தெரிவித்துள்ளார். மற்றும் இந்த கருவியை தயாரிப்பதற்கான உற்பத்தி செலவும் மிகவும் குறைவு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

IIT-டெல்லியின் குசுமா ஸ்கூல் ஆஃப் பயோலாஜிகல் சயின்சஸ் (KSBS) ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட COVID-19 க்கான கண்டறிதல் மதிப்பீட்டை ICMR வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.

"இந்த மதிப்பீடு ICMR-ல் 100 சதவிகிதம் உணர்திறன் மற்றும் தனித்தன்மையுடன் சரிபார்க்கப்பட்டது. இது IIT-டெல்லி நிகழ்நேர PCR அடிப்படையிலான நோயறிதல் மதிப்பீட்டிற்கு ICMR ஒப்புதலைப் பெற்ற முதல் கல்வி நிறுவனமாக திகழ்கிறது" என்று டெல்லி IIT-ன் அறிக்கை குறிப்பிடுகிறது.

READ | புலி, பூனை தொடர்ந்து பசுவுக்கும் கொரோனாவா..? ஆந்திரா-வில் அதிர்ச்சி...

ICMR-ஆல் அங்கீகரிக்கப்பட்ட COVID-19 க்கான முதல் ஆய்வு-இலவச மதிப்பீடு இதுவாகும், மேலும் இது குறிப்பிட்ட மற்றும் மலிவு உயர் செயல்திறன் சோதனைக்கு பயனுள்ளதாக இருக்கும். ஃப்ளோரசன்ட் ஆய்வுகள் தேவையில்லை என்பதால் இதை எளிதாக அளவிட முடியும் என கூறப்படுகிறது. மற்றும் விரைவில் பொருத்தமான தொழில்துறை கூட்டாளர்களுடன் மலிவு விலையில், இந்த கருவி பெரிய அளவில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது.

Trending News