தமிழக பாஜகவைச் செயற்குழு உறுப்பினர் கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அயல்நாட்டு மரங்களை அகற்றுவது தொடர்பான ஆரம்பகட்ட பணியை தொடங்கவே 8 ஆண்டுகள் என்றால், அதை அகற்றுவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும் என தமிழக அரசிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அநாகரிகமாக உடை அணிந்து வருவதாக புகார் உள்ளதா? ஆகம சாஸ்திரத்தில் வேட்டி தான் அணிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது என்பதற்கு என்ன ஆதாரங்கள் உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கடலூர் திமுக எம்.பி. ரமேஷ் மீதான கொலை வழக்கின் விசாரணையை விழுப்புரம் சிபிசிஐடி கூடுதல் எஸ்.பி கண்காணிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் குடிநீர் வசதிகள் மற்றும் சுகாதாரமான கழிப்பறை வசதிகள் உள்ளனவா என்பது குறித்து அடிக்கடி ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் 'ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு' என கருத்து தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசில் கார்ப்பரேட் நிறுவனங்கள் இவ்வளவு ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளது.
பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ஏற்படும் பாலியல் தொல்லைகள் குறித்து புகார் தெரிவிக்க கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணை 8 வாரங்களுக்குள் அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் விதிமுறைகள் அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்களுக்கு கட்அவுட், பிளக்ஸ் பேனர்கள் வைக்க தடை விதித்து உயர்நிதீமன்ற மதுரை கிளை உத்தரவு பிரப்பித்துள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.