நில அபகரிப்பு வழக்கு : ஜெயக்குமாரின் மகள் மற்றும் மருமகனுக்கு ஜாமீன்

நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Written by - Gowtham Natarajan | Last Updated : Mar 30, 2022, 12:57 PM IST
  • 8 கிரவுண்ட் நில அபகரிப்பு தொடர்பான வழக்கு
  • ஜெயக்குமாரின் மகள் மற்றும் மருமகனுக்கு ஜாமீன்
  • 2 வாரங்களுக்கு ஆஜராகி கையெழுத்திட உத்தரவு
நில அபகரிப்பு வழக்கு : ஜெயக்குமாரின் மகள் மற்றும் மருமகனுக்கு ஜாமீன்  title=

சென்னை துரைப்பாக்கத்தில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது. அதில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம்  மிரட்டி நிலத்தை அபகரித்துக் கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மகேஷ் குமார் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஜெயக்குமார், அவரது மருமகன் நவீன்குமார் மற்றும் மகள் ஜெயபிரியா ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித்திட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயக்குமாருக்கு  சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, ஜெயக்குமாரின் மகள் ஜெயபிரியா மற்றும் மருமகன் நவீன்குமார் ஆகியோரின் முன்ஜாமீன் கோரிய மனுவை ஆலந்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், 6 வருடங்களுக்கு முன்பான சம்பவத்தில் தாமதமாக புகார் அளிக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் 8 மாதங்கள் கழித்து தங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் சிவில் வழக்கு ஆலந்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், பொய் புகாரில் பதிவான இந்த வழக்கில் எந்தவித தொடர்பும் இல்லாத முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளதாகவும், அரசியல் உள்நோக்கத்தோடு பதிவு செய்யப்பட்டுள்ளதால், தங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் மனுவில் கோரினர்.

Highcourt

மேலும் படிக்க | பொறியியல் படிப்புகளுக்கு கணிதம் கட்டாயமில்லை. புதிய விதிகளை வெளியிட்ட ஏஐசிடிஇ

இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு  விசாரணைக்கு வந்தபோது, புகார்தாரரான மகேஷ் தரப்பில் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், மீன்பிடி வலை தயாரிக்கும் நிறுவனத்தில் தற்போது நவின் குமாரும், மகேஷும் பங்குதாரர்களாக இல்லை எனவும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவருடைய அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி தன்னை மிரட்டி அலுவலகத்தில் உள்ள கணினி மற்றும் கணக்கு சம்பந்தமான ஆவணங்களை எடுத்துச் சென்றதாகத் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் மற்றும் மருமகனுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். 2 வாரங்களுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு தினசரி ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் ஜெயக்குமாரின் மகள் ஜெயபிரியாவிற்கு 2 வாரங்களில் திங்கட் கிழமை மட்டும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜராகிக் கையெழுத்திட உத்தரவிட்டார்.

மேலும் படிக்க | ஆதார்-பான் இணைப்பு: மார்ச் 31ம் தேதிக்குள் செய்யவில்லை என்றால் சிக்கல்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

 

 

Trending News