ஓய்வூதியம் தொடர்பான நல்ல செய்தி உள்ளது. ஓய்வூதிய நிதி அமைப்பான இபிஎஃப்ஓ, ஒழுங்கமைக்கப்பட்ட துறை ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவர ஆலோசித்து வருகிறது.
திமுகவை ஆன்மீகத்துக்கு எதிரான கட்சி என திட்டமிட்டு சித்தரிக்கும் முயற்சிப்பதாக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தீபாவளிக்கு முதலமைச்சர் வாழ்த்து சொல்லாதது ஏன் என எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் கேள்வி எழுப்பியதற்கு ஸ்டாலின் இவ்வாறு பதிலளித்தார்.
தற்காலிகமாக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டு, அதற்கு பதில் பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர் பதவிகளை கொண்டு வர இபிஎஸ் முயன்று வருவதாக அதிமுக வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கிய பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரித்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக சசிகலா அறிவித்துள்ளார்.
கல்வி, வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு அளித்து தமிழக அரசு நிறைவேற்றிய அவசர சட்டத்தை ரத்து செய்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் வெளிநாட்டு பயணமாக துபாய் சென்றுள்ளார். அங்கு அவர் கோட் சூட் சகிதம் ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்கள் மற்றும் முதலீட்டர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசின் சிறந்த திட்டங்களை முடக்க நினைப்பதில் பெயர்போனது அதிமுக என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜெயலலிதாவுக்கு என்னென்ன உணவுகள் வழங்கப்பட்டது என்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.