திருமணம் என்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்ச்சி. அதற்காக பல மாதங்கள் திட்டமிட்டு, அதை தங்கள் வாழ்வின் மறக்காத தருணமாக மாற்ற மணமக்கள் பாடுபடுவார்கள். ஆனால் மாதக்கணக்காக பட்ட சிரமங்களும், பல ஆண்டுக்களாக கண்ட கனவுகளும் நிறைவேறிக் கொண்டிருக்கும் நேரத்தில் மணமேடையில் தூக்கம் வந்தால் என்னவாகும்?
இன்று ஆவணி அவிட்டம் என்னும் இந்த மத சடங்கு பல தரப்பு இந்துக்களால் அனுசரிக்கப்படுகிறது. முப்புரிநூல் என்றும் அழைக்கப்படும் பூணூல் மாற்றும் தினம் இன்று...
கடந்த ஆண்டு ஆகஸ்டு 30-ம் தேதி தமிழக கவர்னராக 5 ஆண்டுகள் பணியாற்றிய ரோசய்யாவின் பதவிகாலம் முடிவடைந்தது. இதையடுத்து மகாராஷ்டிர மாநில கவர்னராக இருந்து வரும் வித்யாசாகர் ராவ் கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி தமிழகத்துக்கு பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து தமிழகத்துக்கு முழு நேர கவர்னரை நியமிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில், தமிழகத்தின் கவர்னராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டுள்ளார்.
காவிரி மகா புஷ்கர விழா இன்று மயிலாடுதுறையில் துவங்கியது. இந்த விழாவில் ஆயிரகணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
12 ஆண்டுகளுக்கு பின் குரு பகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். அவர், ஓராண்டு காலம், துலாம் ராசியில் சஞ்சரிப்பார். இந்த ஓராண்டில், துலாம் ராசிக்குரிய புண்ணிய நதியான காவிரியில், பிரம்மாவின் கமண்டலத்தில் புஷ்கர தீர்த்தம் காவிரியில் கலந்து, நீராடுபவர்களின் பாவங்களை தீர்க்கும் என்பது ஐதீகம். இதன்படி 144 வருடங்களுக்கு பின் மகா புஷ்கர் விழா இன்று துவங்கியது.
இந்த ஆண்டின் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா 2 நாட்கள் நடைபெற்றது.
இதில் முதல் நாள் நிகழ்ச்சியில் தெலுங்கு, கன்னட திரைப்பட நட்சத்திரங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. மறுநாள்
நடைபெற்ற விழாவில் தமிழ் மற்றும் மலையாள திரைப்பட நட்சத்திரங்களுக்கு விருதுகள் வழங்கி வழங்கப்பட்டது.
இதில் சிறந்த நடிகருக்கான விருது:- சிவகார்த்திகேயன்
சிறந்த நடிகைக்கான விருது:- நயன்தாரா
சிறந்த பாடகருக்கான விருது:- அனிரூத்
சிறந்த பாடலாசிரியரருக்கான விருது:- மதன் கார்க்கி
சிறந்த எதிர்மறை கதாபாத்திரத்துக்கான விருது:- திரிஷா
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.