வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்தால் மில்லியன்கணக்கான மக்களின் வாழ்க்கை தடம் புரண்டுவிட்டது. பங்களாதேஷில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட வெள்ளம் ஞாயிற்றுக்கிழமை குறையத் தொடங்கியது. ஆனால் தீவிர வானிலையால் மக்கள் சிக்கித் தவிக்கின்றனர். மக்களுக்கு உதவ மீட்புப் பணியாளர்கள் போராடி வருகின்றனர்.
தாழ்வான பகுதியில் இருக்கும் பங்களாதேஷ் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு வெள்ளம் ஒரு வழக்கமான அச்சுறுத்தலாக உள்ளது. அதோடு காலநிலை மாற்றமும் நிலைமையை கணிப்பதை சிரமத்திற்கு உள்ளாக்குகிறது
(Photograph:AFP)
இந்த ஆண்டில் உலகை உலுக்கிய பெரிய இயற்கை பேரழிவுகள் உலகையே புரட்டிப் போட்டன. கொரோனா வைரஸ் பரவலை இயற்கை பேரிடர் என்ற வகையில் அடக்கிவிட முடியாது... இந்த 2020 பல இயற்கை பேரழிவுகள், வைரஸ் பரவல், அதன் தாக்கம் என பெரிய களேபரத்தை விட்டுச் செல்கிறது...
கவுகாத்தில் இருந்து மத்திய கந்தாவிற்கு 45 பயணிகளுடன் பயணித்த படகு எதிர்பாரதா விதமாக கவிழ்ந்து விபத்திற்குள்ளாகி உள்ளது என ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அசாம் மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்யும் பலத்த மழையால் மாநிலம் முழுவதும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டனர். அங்குள்ள 22 மாவட்டங்கள் வெள்ள நீரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், 18 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதுவரை அங்கு மழை தொடர்பான சம்பவங்களில் 18 பேர் பலியாகியுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.