வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்தால் மில்லியன்கணக்கான மக்களின் வாழ்க்கை தடம் புரண்டுவிட்டது. பங்களாதேஷில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட வெள்ளம் ஞாயிற்றுக்கிழமை குறையத் தொடங்கியது. ஆனால் தீவிர வானிலையால் மக்கள் சிக்கித் தவிக்கின்றனர். மக்களுக்கு உதவ மீட்புப் பணியாளர்கள் போராடி வருகின்றனர்.
தாழ்வான பகுதியில் இருக்கும் பங்களாதேஷ் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு வெள்ளம் ஒரு வழக்கமான அச்சுறுத்தலாக உள்ளது. அதோடு காலநிலை மாற்றமும் நிலைமையை கணிப்பதை சிரமத்திற்கு உள்ளாக்குகிறது
(Photograph:AFP)
கடந்த வாரத்தில், இந்தியாவில் பெய்த கனமழைக்குப் பிறகு, பங்களாதேஷின் சில்ஹெட் பகுதியில் வெள்ள நீர் ஒரு பெரிய தடுப்பணையை உடைத்து, சுமார் இரண்டு மில்லியன் மக்களைப் பாதித்தது, டஜன் கணக்கான கிராமங்களை நாசம் செய்தி வெள்ளத்திர்கு குறைந்தது 10 பேர் பலியானார்கள். சில்ஹெட் மாவட்டத்தில் 70 சதவீதமும், அண்டை நாடான சுனம்கஞ்சில் 60 சதவீதமும் வெள்ளம் பாதித்துள்ளது. (Photograph:AFP)
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் இரண்டு மில்லியன் மக்களுக்கு நிவாரண நடவடிக்கைகளை அதிகாரிகள் துரிதப்படுத்தியுள்ளனர். நிவாரணப் பொருட்களை பெறுவதற்காக மக்கள் சண்டையிடும் அவலநிலையும் இருக்கிறது. (Photograph:AFP)
இந்தியாவில் இருந்து நீர்வரத்து குறையும் வரை நிலைமையை சரிசெய்ய முடியாது. சில்ஹெட் நகரில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆனால் வெளி நகரங்கள் இன்னும் நீருக்கடியில் உள்ளன (Photograph:AFP)
இந்திய எல்லையில் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் இடியுடன் கூடிய மழை காரணமாக சுமார் 50 பேர் பலியாகியுள்ளதாக உள்ளூர் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடகிழக்கு மாநிலமான அசாமில், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18ஐ எட்டியுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (மே 22, 2022) தெரிவித்தனர். (Photograph:AFP)
அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (ASDMA) படி, கிட்டத்தட்ட 3,250 கிராமங்கள் பகுதி அல்லது முழுமையாக நீரில் மூழ்கியுள்ளன. ஏஎஸ்டிஎம்ஏ மதிப்பீட்டின்படி, 92,000க்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். (Photograph:AFP)
ராணுவத்தின் உதவியுடன் மாநில மற்றும் தேசிய மீட்புப் படைகள் கிராமங்களில் இருந்து மக்களை மீட்டு உணவு, சுத்தமான குடிநீர் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கவும், சாலைகளை சுத்தம் செய்யவும் பணிபுரிந்தன. (Photograph:AFP)