பிரம்மபுத்திரா நதியில் 45 பயணிகளுடன் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து

கவுகாத்தில் இருந்து மத்திய கந்தாவிற்கு 45 பயணிகளுடன் பயணித்த படகு எதிர்பாரதா விதமாக கவிழ்ந்து விபத்திற்குள்ளாகி உள்ளது என ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 5, 2018, 07:27 PM IST
பிரம்மபுத்திரா நதியில் 45 பயணிகளுடன் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து title=

புதுடில்லி: அசாம் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. 4 மாவட்டங்கள் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளன. இதுவரை 12,000 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இன்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவலின் படி, பிரம்மபுத்திரா நதியில் கவுகாத்தில் இருந்து மத்திய கந்தாவிற்கு படகில் 45 பேர் பயணம் செய்த போது எதிர்பாராத விதமாக கவிழ்ந்து மூழ்கியது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சம்பவ இடத்திற்கு போலிஸ் மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழு விரைந்துள்ளது. மீட்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. 

 

நான்கு மாவட்டங்களில் வெள்ளத்தால் மூழ்கின:

அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (ASDMA) உத்தியோகபூர்வ அறிக்கையின் படி, டிமேஜி, விஸ்வநாத், கோலாஹாட் மற்றும் சிவசாகர் என நான்கு மாவட்டங்களில் மொத்தம் 676 ஹெக்டேர் விவசாய நிலங்கள் மூழ்கியுள்ளன. மாநிலத்தின் இந்த பருவத்தில் இது மூன்றாவது முறையாக வெள்ளம் ஏற்ப்பட்டு உள்ளது. அசாம் மாநிலத்தில் தற்போது ஏற்ப்பட்ட வெள்ளத்தால் யாரும் இறந்துவிட்டதாக செய்தி எதுவும் இல்லை. ஆனால் கடந்த இரண்டு முறை ஏற்ப்பட்ட வெள்ளத்தால் 50 பேர் உயிரிழந்தனர் என அசாம் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. 

12,000 பேர் வெள்ளத்தால் பாதிப்பு: 

நான்கு மாவட்டங்களில் 48 கிராமங்களில் 12 ஆயிரம் 428 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகமாக டிமேஜி மாவட்டத்தில் மட்டும் 11 ஆயிரம் 355 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதற்கு அடுத்த படியாகா விஸ்வநாத் மாவட்டத்தில் 390 பேர், சிவசாகர் மாவட்டத்தில் 350 பேர், கோலாஹாட்  மாவட்டத்தில் 333 பேர் பாதிப்படைந்துள்ளனர். 

அசாம் மாநிலத்தில் ஏற்ப்பட்ட வெள்ளத்தால் பிரம்மபுத்திரா மற்றும் அதன் கிளை நதிகள் நிரம்பி அபாய கட்டக்கு மேலாக தண்ணீர் நிரப்பு உள்ளது. 

Trending News