லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹமான் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டகளின் பிரம்மாண்டமாகக் கருதப்படும் படம் 2.0.
அண்மையில்தான் துபாயில் பிரமாண்டமாக ‘2.0’ படத்தின் இசை வெளியீட்டு நடைபெற்றது.
இந்நிலையில் இப்படத்தில் ஒருவித வில்லனாக நடிக்கும் அக்ஷய்குமாருக்கு மொத்தம் 12 கெட்டப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது 2.0 படத்தில் அக்ஷய் குமாருக்கு 12 கெட்டப் என்ற தகவல் ரசிகர்களுக்கு இன்னும் எதிர்ப்பார்ப்பை தூண்டியுள்ளது.
லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹமான் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டகளின் பிரம்மாண்டமாகக் கருதப்படும் 2.0 படத்தின் இசை வெளியீடு விழா துபாயில் வரும் நாளை வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.
இசை வெளியீடு நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்:-
* 2.0 படத்தின் இசை வெளியீடு burj park என்ற இடத்தில் நடைபெறுகிறது. இப்படிப்பட்ட நிகழ்வு நடத்த துபாய் அரசாங்கம் முதன் முறையாக உத்தரவு வழங்கியுள்ளது.
ராஜமௌலியின் பிரம்மாண்ட படைப்பான 'பாகுபலி 2' திரைப்படத்தை பார்த்த இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் படக்குழுவினருக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான 'பாகுபலி 2' திரைப்படம் உலக அரங்கில் இந்தியாவின் அடையாளமாக வெற்றி வாகைச் சூடி வருகிறது. சர்வதேச அளவில் ரூ.1500 கோடி வசூலை எட்டி தினசரி ஒரு சாதனை படைத்து வருகிறது.
தற்போது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானும் தனது வாழ்த்துக்களை பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஷங்கர் இயக்கும் 2.0 படத்தில் நாத்து வரும் எமி ஜாக்சன் காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டு தற்போது முடிவடைந்துள்ளது.
லைகா புரோடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
சென்னையில் பிரமாண்ட செட் அமைத்து நடந்து வந்த நிலையில், எமி ஜாக்சன் நடிக்கும் காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டு தற்போது முடிவடைந்துள்ளது. இதனை எமி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து இன்று காலை லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றார்.
இளைஞர்களின் அமைதியான போராட்டத்தைப் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது என்று இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார்.
திரையுலக பிரபலங்கள் பலரும் இப்போராட்டத்துக்கு தங்களுடைய முழு ஆதரவையும் தெரிவித்து வருகிறார்கள். இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வெள்ளிக்கிழமை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்திருந்தார்.
தற்போது பேசிய அவர் கூறியதாவது:-
இன்று இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 50வது பிறந்த நாள் தினம்.
1966-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி சேகர் - கஸ்துாரி தம்பதியின் மகனாக சென்னையில் பிறந்தார், ரஹ்மானின் இயற்பெயர் திலீப்குமார். இசை பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்ததன் காரணமாக, குடும்ப பொறுப்பை ஏற்கும் நிலைக்கு ஆளானார். 11 வயதில் இளையராஜா இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்தார். படிப்படியாக முன்னேறி டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாசிக்கல் மியூசிக்கில் பட்டம் பெற்றார்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் '2.0' படத்தின் பர்ஸ்ட் லுக் நவம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினி, அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 2.0. சுமார் 300 கோடி செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.
சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. ரஜினி உடல்நிலை சரியின்றி வெளிநாட்டில் ஒய்வு எடுக்கும் போது, அவர் இல்லாத காட்சிகளை காட்சிப்படுத்தி வந்தார் இயக்குநர் ஷங்கர்.
ஏ.ஆர். ரஹ்மான் "ஸ்லம் டாக் மில்லினியர்" படத்தின் மூலமாக ஆஸ்கர் விருதுகளை வென்று இந்தியாவின் பெருமையை உலகளவில் உயர்த்தினார். மேலும் கிராமி, கோல்டன் குளோப் உட்பட ஏராளமான விருதுகளை ஏ.ஆர். ரஹ்மான் வென்றிருக்கிறார்.
தற்போது இசையுலகில் ரஹ்மானின் இசை சேவையைப் பாராட்டி ஜப்பான் நாட்டின் உயரிய விருதான புகுவோகா விருதை அவருக்கு வழங்குவதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.
விக்ரம் குமார் இயக்கத்தில் சூரியா நடித்திருக்கும் படம் ‘24’ வருகிற மே மாதத்தில் வெளியாகும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
சூர்யா மாறுபட்ட கெட்டப்புகளில் நடித்த இப்படத்தின் டிரைலர் சமிபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சூர்யாவுடன் சமந்தா, நித்யாமேனன் மற்றும் சரண்யா பொன்வண்ணன் மேலும் பலர் நடிகர்கள் நடித்துள்ளனர். டைம் டிராவல் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.