லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹமான் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டகளின் பிரம்மாண்டமாகக் கருதப்படும் படம் 2.0.
அண்மையில்தான் துபாயில் பிரமாண்டமாக ‘2.0’ படத்தின் இசை வெளியீட்டு நடைபெற்றது.
இந்நிலையில் இப்படத்தில் ஒருவித வில்லனாக நடிக்கும் அக்ஷய்குமாருக்கு மொத்தம் 12 கெட்டப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது 2.0 படத்தில் அக்ஷய் குமாருக்கு 12 கெட்டப் என்ற தகவல் ரசிகர்களுக்கு இன்னும் எதிர்ப்பார்ப்பை தூண்டியுள்ளது.
2.O படத்தின் ஆடியோ வெளியிடப்படும் நாள் மற்றும் இடம் போன்றவற்றை படக்குழு அறிவித்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் தான் ‘2.O’. சுமார் 400 கோடி பட்ஜெட்டில் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகள் எல்லாம் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் மற்றும் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு மாவோயிஸ்ட்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா தாக்குதலில் உயிரிழந்த 12 பாதுகாப்புப் படை வீரர்களின் குடும்பங்களுக்கு பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் மற்றும் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் நிதியுதவி வழங்குவதை கண்டித்து மாவோயிஸ்ட்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
டெல்லியில் 64-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கபட்டது.
சிறந்த தமிழ்த்திரைப்படமாக ஜோக்கர் (இயக்கம்:ராஜு முருகன்) தேர்வு செய்யபட்டு உள்ளது.
சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது கவிஞர் வைரமுத்துவுக்கு (படம்: தர்மதுரை) அறிவிக்கபட்டு உள்ளது.
சிறந்த திரைப்பட எழுத்தாளருக்கான தேசிய விருது தனஞ்செயனுக்கு அறிவிக்கபட்டு உள்ளது.
சிறந்த பாடகர் - சுந்தர் ஐயர், (படம்:ஜோக்கர், பாடல் ஜாஸ்மின்)
சிறந்த ஒளிப்பதிவாளர் விருது - திரு (படம்:24)
சிறந்த நடிகருக்கான தேசிய விருது பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு கிடைத்துள்ளது (ரஸ்தம் இந்தி படம்)
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா தாக்குதலில் பலியான மத்திய ரிசர்வ் படை போலீசார் 12 பேரின் குடும்பத்தினருக்கு நடிகர் அக்ஷய் குமார் தலா 9 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.
நக்சலைட்டுகள் அதிகம் நிறைந்த பகுதியான சுக்மா மாவட்டத்தில் உள்ள பெஜ்ஜி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட காட்டுப்பகுதியில் சாலை கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளுக்கு துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் '2.0' படத்தின் பர்ஸ்ட் லுக் நவம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினி, அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 2.0. சுமார் 300 கோடி செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.
சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. ரஜினி உடல்நிலை சரியின்றி வெளிநாட்டில் ஒய்வு எடுக்கும் போது, அவர் இல்லாத காட்சிகளை காட்சிப்படுத்தி வந்தார் இயக்குநர் ஷங்கர்.
ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 2.0 படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படத்தின் இயக்குநர் ஷங்கர் அவர்கள் தனது டுவீட்டர் பக்கத்தில் 2.0 படத்தின் 100-வது நாள் படப்பிடிப்பு நிறைவு செய்கிறோம். ரஜினியும் அக்ஷய் குமாரும் நடித்த கிளைமாக்ஸ் உள்ளிட்ட முக்கியமான இரு பெரிய சண்டைக்காட்சிகளை எடுத்துமுடித்துவிட்டோம். 50% படப்பிடிப்பு முடிந்தது என்று அவர் டுவீட் செய்துள்ளார்.
ஜிவி பிரகாஷ் இசை அமைத்து நடித்திருக்கும் படம் "எனக்கு இன்னொரு பேர் இருக்கு" இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கியுள்ளார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் ரஜினி நடிக்கும் '2.ஓ' படத்தையும் இந்நிறுவனம் தயாரித்து வருகிறது. அதில் வில்லனாக அக்ஷய்குமார் நடிக்கிறார்.
'தெறி' படத்தின் இந்தி ரீமேக்கில் இந்தி நடிகர் அக்ஷய்குமார் நடிக்கப்போவதாக செய்திகள் வந்துள்ளன. ஏற்கனவே எ.ஆர் முருகதாஸ் இயக்கிய 'துப்பாக்கி' இந்தி ரீமேக்கில் 'ஹாலிடே' என்ற பெயரில் வெளியானது. இந்த படத்தை இந்தியிலும் எ.ஆர் முருகதாஸ் இயக்க அக்ஷய்குமார் நடித்தார். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதை தொடர்ந்து. 'கத்தி' இந்தி ரீமேக்கிலும் இவர் நடிக்கவிருக்கிறார். அதைதொடர்ந்து "தெறி' இந்தி ரீமேக்கில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறாராம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் சில நாட்களில் வெளியாகும் என்றும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.