2.O படத்தின் ஆடியோ வெளியீடு நாள் அறிவிப்பு!!

Last Updated : Jun 19, 2017, 03:34 PM IST
2.O படத்தின் ஆடியோ வெளியீடு நாள் அறிவிப்பு!! title=

2.O படத்தின் ஆடியோ வெளியிடப்படும் நாள் மற்றும் இடம் போன்றவற்றை படக்குழு அறிவித்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் தான் ‘2.O’. சுமார் 400 கோடி பட்ஜெட்டில் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகள் எல்லாம் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், வருகிற அக்டோபர் மாதம் தீபாவளியையொட்டி, இப்படத்தின் ஆடியோ வெளியீட்டை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்த ஆடியோ வெளியீட்டு விழாவை துபாயில் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சனும், வில்லனாக பாலிவுட் நடிகர் அக்ஷய்குமாரும் நடித்துள்ளார். இப்படம் அடுத்த வருடம் வெளிவரவிருக்கிறது. 

Trending News