கடந்த 7-ம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் தொடரின் 11_வது சீசனின் நேற்று நடைபெற்ற 7_வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது
நடந்து முடிந்த ரஷ்ய அதிபர் தேர்தலில் ஏமாற்று வேலை நடந்திருப்பதாக ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ள முன்னாள் அமெரிக்க உளவுத்துறை ஊழியர் எட்வார்ட் ஸ்னோடென் தெரிவித்துள்ளார்.
ஒடிசாவில் தலை ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து அவர்களின் தலையை பிரித்துள்ளனர்.
கந்தமால் மாவட்டம் மிலிபடா கிராமத்தைச் சேர்ந்த இரண்டு வயது இரட்டை குழந்தைகளான ஜகா – காலியா தலை ஒட்டிப் பிறந்தவர்கள். தலை ஒட்டிப் பிறந்ததால் மிகவும் சிரமப்பட்ட இவர்களுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி கோவா மாநிலத்தின் பனாஜி, வால்போய் சட்டமன்ற தொகுதிகளுக்கும், டெல்லியின் பவானா மற்றும் ஆந்திர பிரதேசத்தின் நந்தியாலா தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில், இடைத் தேர்தல் நடைபெற்ற 4 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.
பனாஜி தொகுதியி தொடக்கம் முதலே கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் முன்னிலை வகித்து வந்தார். நந்தியாலா தொகுதியில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் முன்னிலை பெற்று வந்தார்.
அமெரிக்காவில் தொழில் முறை குத்து சண்டை வீரர்களில் புகழ் பெற்ற பிளாய்ட் மேவெதர் கடந்த 2 வருடங்களாக ஓய்வில் இருந்து திரும்பி வந்த நிலையில் இவர் அயர்லாந்தின் மெக் கிரிகோர் உடன் குத்து சண்டை போட்டியில் விளையாடினார்.
இந்த போட்டியில் இவர் 10வது சுற்றின் முடிவில் மெக்கிரிகோரை வீழ்த்தி வெற்றியை தன்வசப்படுத்தினார். இதனை தொடர்ந்து 50 போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் வீரர் என்ற சாதனையை அவர் பெற்றுள்ளார்.
இதனால் பிரபல குத்து சண்டை வீரரான ராக்கி மார்சியானோவை விட ஒரு வெற்றி அதிகம் பெற்று 50-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றார்.
6 நாடுகள் பங்கேற்ற ஆசிய கோப்பை மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் நடந்தது. இந்த போட்டியில் இந்திய பெண்கள் சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.
இதுவரை நடந்துள்ள 6 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அனைத்திலும் இந்தியாவே பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய பெண்கள் அணிக்கு கிரிக்கெட் வாரியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
நேற்று நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதின, முதல் ஒருநாள் போட்டி தர்மசாலாவில் நடைபெற்றது. இந்திய அணி டாஸ் வென்றது. நியூசிலாந்து அணி 43.5 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்கள் எடுத்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.