Railway Super APP : இந்திய ரயில்வேயின் சூப்பர் செயலி, 2 நிமிடத்தில் ரயில் டிக்கெட் கன்பார்ம்

Railway Super APP : இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியிருக்கும் சூப்பர் ஆப் மூலம் 2 நிமிடத்தில் முன்பதிவு டிக்கெட் புக் செய்துவிடலாம், ரயிலின் ரன்னிங் ஸ்டேட்டஸ் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 28, 2024, 12:19 PM IST
  • ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய செயலி
  • ஐஆர்சிடிசி செயலிக்கு இனி கடும் போட்டி
  • 2 நிமிடத்தில் டிக்கெட் முன்பதிவு செய்துவிட முடியும்
Railway Super APP : இந்திய ரயில்வேயின் சூப்பர் செயலி, 2 நிமிடத்தில் ரயில் டிக்கெட் கன்பார்ம் title=

நாள்தோறும் கோடிக்கணக்கானோர் பயணிக்கும் இந்திய ரயில்வே பயணிகளின் சிரமங்களை போக்கும் வகையில் அடிக்கடி புதிய அப்டேட்டுகளை செய்து கொண்டிருக்கிறது. அந்தவகையில் ரயில் பயணத்துக்கு டிக்கெட் எடுப்பதும், முன்பதிவு செய்வதும் இன்னும் கடைகோடி மக்களுக்கு கொஞ்சம் சிரமமாகவே இருக்கிறது. இதற்காக ஏற்கனவே பல அம்சங்கள் அறிமுகப்படுத்தி சீக்கிரம் ரயில் டிக்கெட்டுகளை பெறும் வசதியை அறிமுகப்படுத்தியிருந்தாலும், இப்போது இன்னொரு செயலியும் களமிறங்கியுள்ளது. இந்திய ரயில்வேயின் இந்த சூப்பர் ஆப் மூலம் 2 நிமிடத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்துவிட முடியும். அத்துடன் ரயில்களின் ரன்னிங் ஸ்டேட்டஸ் முதல் அனைத்து தகவல்களையும் பயணிகள் பெற்றுக் கொள்ள முடியும். ஐஆர்சிடிசிக்கு கடும் போட்டியை இந்த செயலி ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு ரயிலில் டிக்கெட் புக் செய்வது எப்படி? லேட்டஸ்ட் அப்டேட்

ரயில்வேயின் புதிய சூப்பர் ஆப்

ரயில்வேயின் இந்த புதிய சூப்பர் ஆப் உதவியுடன், டிக்கெட் முன்பதிவு அனுபவமே மாறப்போகிறது. புதிய ரயில்வே சூப்பர் செயலியை ரயில்வே விரைவில் கொண்டு வருகிறது. இந்த செயலி குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறும்போது, ரயில்வேயின் அனைத்து சேவைகளும் இந்த சூப்பர் செயலியில் கிடைக்கும். இந்த சூப்பர் அப்ளிகேஷனைப் பற்றி அதிகம் கூறவில்லை என்றாலும், இந்த செயலியின் மூலம் ரெயிலில் பயணிப்பவர்களின் அனுபவம் எப்படி மாறும் என்பதை மட்டும் அவர் கூறியுள்ளார்.

ரயில்வேயின் சூப்பர் செயலியில் என்ன சிறப்பு இருக்கும்?

தற்போது ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய IRCTC ஆப் அல்லது இணையதளத்தைப் பயன்படுத்த வேண்டும். ரயிலின் நிலையை அறிய அல்லது PNR சரிபார்க்க வேண்டும் என்றால், நீங்கள் மற்றொரு செயலியை டவுன்லோடு செய்து அதில் பார்க்க வேண்டும். ஆனால் ரயில்வேயின் சூப்பர் ஆப் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இந்த சிக்கல் இருக்காது. இந்த சூப்பர் செயலியின் உதவியுடன், அனைத்து சேவைகளும் விரல் நுனியில் கிடைத்துவிடும். அதாவது, டிக்கெட் முன்பதிவு முதல் ரயிலின் பிஎன்ஆர் நிலையை சரிபார்ப்பது, ரயிலின் ரன்னிங் ஸ்டேட்டஸை சரிபார்ப்பது வரை அனைத்தும் ஒரே இடத்தில் பார்த்துக் கொள்ளலாம்.

IRCTC செயலிக்கு கடும் போட்டி

IRCTC தற்போது ரயில்வே டிக்கெட் முன்பதிவில் ஆதிக்கம் செலுத்துகிறது. ஆனால் சூப்பர் செயலி வந்துவிட்டால், அந்த செயலி கடும் போட்டியை எதிர்கொள்ளத் தொடங்கும். ரயில்வேயின் சூப்பர் ஆப் மல்டி டாஸ்கிங் அம்சத்துடன் வருவதால், ஐஆர்சிடி செயலி, பயனாளர்களின் செல்வாக்கை படிப்படியாக இழக்க நேரிடும். அதனால் அந்த செயலி அடுத்தக்கட அப்டேட் செய்து கொள்ள வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்படும்.

மேலும் படிக்க | ரயில் விபத்து ஏற்பட்ட உடனே பயணிகள் என்ன செய்ய வேண்டும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News