IPL_2018: ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி!

கடந்த 7-ம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் தொடரின் 11_வது சீசனின் நேற்று நடைபெற்ற  7_வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது

Last Updated : Apr 13, 2018, 06:26 AM IST
IPL_2018: ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி! title=

கடந்த 7-ம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் தொடரின் 11_வது சீசனின் நேற்று நடைபெற்ற  7_வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.இந்த ஆட்டம் நேற்று இரவு 8 மணிக்கு ஐதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், லெவிசும் களமிறங்கினர்.  

11 ரன்னில் கேப்டன் ரோகித் சர்மா வெளியேற, 9 ரன்னில் பெவிலியனுக்கு திரும்பினார் இளம் அதிரடி வீரர் இஷான் கிஷான். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆரம்பத்தில் இருந்தே நெருக்கடி இருந்தாலும், ஒரு புறம் அதிரடியை காட்டிய எவின் லெவிஸ் 29 ரன்னில் அவுட் ஆனார்.

ஐதராபாத் பந்துவீச்சை சமாளித்த சூரியகுமார் யாதவ் மற்றும் கிரண் பொல்லார்ட் ஆகியோர் தலா 28 ரன்கள் எடுத்து அவுட் ஆக, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நெருக்கடி அதிகரித்தது. ஆனால், ஐதராபாத் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மும்பை இந்தியன்ஸ் அணி விக்கெட்டை பறிகொடுத்து கொண்டே இருக்க, 20 ஓவர் முடிவில் 147 ரன்கள் மட்டுமே எடுத்தது மும்பை.

இதையடுத்து, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சகாவும், ஷிகர் தவானும் இறங்கினர்.

இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு அரை சதம் கடந்தனர். அணியின் எண்ணிக்கை 62 ஆக இருக்கும்போது சகா 22 ரன்களில் அவுட்டானார்.

அடுத்து இறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து அதிரடியாக விளையாடி கொண்டிருந்த தவான் 28 பந்துகளில் 8 பவுண்ட்ரியுடன் 45 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து களமிறங்கிய மணிஷ் பாண்டே 11 ரன்னுடனும், ஷகிப் அல் ஹசன் 12 ரன்னுடனும் ஆட்டமிழந்தனர். அப்போது ஐதராபாத் அணி 5 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்து இறங்கிய தீபக் ஹூடாவும், யூசுப் பதானும் நிதானமாக ஆடினர். யூசுப் பதான் 14 ரன்னிலும். அடுத்த பந்தில் ரஷித் கான் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட்டாகினர்.

இதனால் ஐதராபாத் அணி வெற்றி பெற கடைசி இரண்டு ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரில் ஒரு ரன் கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றி அசத்தினார் முஸ்தபிசுர் ரகுமான். இதனால் இறுதி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது.

முதல் பந்தில் ஹூடா சிக்சர் அடித்தார். அடுத்த பந்து வைட் ஆக ஒரு ரன் கிடைத்தது. அடுத்த பந்தில் ரன் இல்லை. அடுத்த 3 பந்துகளில் தலா ஒரு ரன் அடித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. 

Trending News