IPL_2018: புனேவுக்கு சென்ற கிரிகெட் வீரர்களின் உருக்கம்!!

பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி சென்னையில் நடைபெறவிருந்த ஐ.பி.எல் போட்டிகளை புனேவுக்கு பிசிசிஐ நிர்வாகம் மாற்றியுள்ளது.

Last Updated : Apr 13, 2018, 12:13 PM IST
IPL_2018: புனேவுக்கு சென்ற கிரிகெட் வீரர்களின் உருக்கம்!!  title=

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, சென்னையில் நடக்கும் IPL போட்டிகளைப் புறக்கணிக்க வேண்டும் என்றும், தடை செய்ய வேண்டும் தமிழக அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தினர். 

இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி பிசிசிஐ நிர்வாகம் சென்னையில் நடைபெறவிருந்த ஐ.பி.எல் போட்டிகளை புனேவுக்கு இடம் மாற்றம் செய்துள்ளது. 

இந்நிலையில், இந்த மாற்றம் குறித்து சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் இடம்பெற்றிருக்கும் பல வீரர்கள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

மனம் உடைந்த ஹர்பஜன் சிங்....!!

சென்னையில் விளையாட முடியாமல் போனதால் மனம் உடைந்தது என்று கருத்து தெரிவித்துள்ள ஹர்பஜன் சிங், பிற மண்ணில் களம் கண்டாலும், தமிழ் பாசமும் நேசமும் துளியும் குறையாது என்றும், மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன் தமிழ்நாடு ரசிகர்களிடம் இருந்து விடைபெறுகிறேன் என்றும் உருக்கமாக பதிந்துள்ளார்.

புனே விமான நிலையத்தில் சுரேஷ் ரெய்னா பதில்....!

சொந்த மண்ணில் விளையாட இருந்த தருணங்களை நிச்சயம் தவறவிடுவோம் என்று குறிப்பிட்டுள்ள சுரேஷ் ரெய்னா, சி.எஸ்.கே ரசிகர்கள் எப்போது எங்கள் இதயத்தில் இருக்கிறார்கள் என்றும், தற்போது புனேவுக்கு செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆதரவு அளித்ததற்காக சி.எஸ்.கே ரசிகர்களுக்கும் தனது நன்றிகளை தெரிவித்துள்ள மைக் ஹஸி, பிற போட்டிகளை சென்னையை விட்டு ஆட வேண்டும் என்பது கஷ்டமாக இருப்பதாகவும், தற்போது நிலவும் பிரச்சனைகளுக்கு அமைதி மற்றும் சுமூகமான தீர்வு எட்டப்பட வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர் சாம் பில்லிங்கஸ் கூறுகையில்.....!

சேப்பாக்கத்திலிருந்து நாங்கள் வெளியேற வேண்டும் என்ற முடிவு எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மைதானத்தில் தாக்குதலுக்குள்ளான ரசிகர் விரைவில் குணம்பெற்று அனைத்து பிரச்சனைகளும் தீர்வை எட்டவேண்டும் என்றார். 

Trending News