பகுஜன் சமாஜ் கட்சி வங்கி கணக்கில் ரூ.104 கோடி டெபாசிட்

பகுஜன் சமாஜ் கட்சியின் வங்கி கணக்கில் ரூ.104 கோடி டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மேலும் மாயாவதியின் சகோதரரின் கணக்கில் ரூ.1.43 கோடியும் முறைகேடாக டெபாசிட் செய்யப்பட்டது குறித்து அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

Last Updated : Dec 27, 2016, 01:44 PM IST
பகுஜன் சமாஜ் கட்சி வங்கி கணக்கில் ரூ.104 கோடி டெபாசிட்  title=

புதுடெல்லி: பகுஜன் சமாஜ் கட்சியின் வங்கி கணக்கில் ரூ.104 கோடி டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மேலும் மாயாவதியின் சகோதரரின் கணக்கில் ரூ.1.43 கோடியும் முறைகேடாக டெபாசிட் செய்யப்பட்டது குறித்து அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்வோர் மற்றும் புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்வோரின் செயல்பாடுகளை வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகியோர் கூட்டாகக் கண்காணித்து வருகின்றனர். இதன்படி, முறைகேடான வகையில் வங்கிக் கணக்குகளில் செய்யப்படும் டெபாசிட்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளன.

இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் வங்கிக் கணக்கில் இதுவரை ரூ.104 கோடி முறைகேடான டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும், அக்கட்சியின் தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சருமான மாயாவதியின் சகோதரர் வங்கிக் கணக்கில் ரூ.1.43 கோடி முறைகேடாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

டெல்லி உள்ள யுனைடெட் பேங்க் ஆப் இந்தியாவின் கிளையில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தபோது, உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் வங்கி கணக்கில் ரூ.105 கோடி டெபாசிட் செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ரூ.102 கோடிக்கு பழைய 1,000 ரூபாய் நோட்டுகளும், ரூ.3 கோடிக்கு பழைய 500 ரூபாய் நோட்டுகளும் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தன. அடுத்தடுத்த நாட்களில் ரூ.15 கோடி முதல் ரூ.17 கோடி வரை டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.

விரைவில் இதுபற்றி விசாரணை நடத்த உள்ளதாகவும் அமலாக்கத்துறை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

Trending News