ஸ்ரீநகரின் புறநகர் பகுதியான பாம்போரா என்ற இடத்தில் மாநில அரசுக்கு சொந்தமான தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிலகத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இந்த கட்டிட வளாகத்தில் இரண்டு மூன்று தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு விரைந்த பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் பயங்கரமான துப்பாக்கிச் சண்டை நீடித்து வருகிறது. மூன்று தீவிரவாதிகளில் ஒருவன் கொல்லப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் 2 தீவிரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதில் ஒரு ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார்.
ஜம்மு-காஷ்மீர் மாநில தலைநகரான ஸ்ரீநகரின் புறநகர் பகுதியான பாம்போரா என்ற இடத்தில் மாநில அரசுக்கு சொந்தமான தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிலகத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இந்த கட்டிட வளாகத்தில் இரண்டு மூன்று தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு விரைந்த பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் பயங்கரமான துப்பாக்கிச் சண்டை நீடித்து வருகிறது. இதில் ஒரு ராணுவ வீரர் காயம் அடைந்துளார்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியான லாங்கோட், ராம்பூர், நாம்காம் ம்,மற்றும் ஹண்ட்வாரா ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் எல்லையில் ஊடுருவ பயங்கரவாதிகள் முயற்சித்தனர். இதையடுத்து உஷாரான ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளின் முயற்சியை முறியடித்தனர். மேலும் எல்லையில் உள்ள பாரமுல்லாவில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றதாக தகவல் வந்துள்ளது. பூஞ்ச் பகுதியிலும் பதற்றம் நிலவி வருகிறது.
யூரி தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது. ஆனால் அது போன்ற எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை, தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுவது போலியானது என பாகிஸ்தான் கூறி வருகிறது.தாக்குதல் நடத்தப்பட்டதற்கான ஆதாரத்தை இந்தியா வெளியிட வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தியது. மேலும் இந்தியாவிலும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரசை சேர்ந்த சஞ்சய் நிருபம் உள்ளிட்ட அரசியல்வாதிகள் சிலரும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும் என கேட்டு வருகின்றனர்.
ராணுவ பராமறிப்பு பணிகள் மற்றும் மறு விநியோகம் போன்ற பணிகளை மேற்கொள்ள இரு நாட்டின் தரை, வான் மற்றும் கடல் தளங்களை ஒருவருக்கொருவர் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் இந்தியாவும், அமெரிக்காவும் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தால் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவு அதிகரிக்கும் என தெரிகிறது.
இந்த ஒப்பந்த ஏற்பாட்டின்படி, அமெரிக்க ராணுவத்தினர் இந்தியாவில் இருந்து பணியாற்றும் சூழல் தற்போது இல்லை என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஆஷ் கார்டரும் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீநகரில் உள்ள நவ்ஹட்டா பகுதியில், இன்று காலை 8.10 மணியளவில் சி.ஆர்.பி.எப்., வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அவர்கள் அருகில் உள்ள கட்டடத்தில் மறைந்து கொண்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படை வீரர்களும் தொடர்ந்து தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கு இடையே துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது. சி.ஆர்.பி.எப்., ஜவான் ஒருவர் பலியானார்.
ஜம்மு காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒருவன் பிடிபட்டான். எல்லை பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சியை முறியடித்து வந்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குபுவாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் நவ்காம் செக்டாரில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. துப்பாக்கி சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று ராணுவ அதிகாரிகள் கூறிஉள்ளனர்.
துருக்கி நாட்டில் ஜனாதிபதி எர்டோகன் தலைமையில் ஆட்சி நடந்து வந்தது. நேற்று அவர் விடுமுறையை கழிப்பதற்காக துருக்கியில் உள்ள கடற்கரை சுற்றுலா தலமான மர்மாரிஸ் எனும் பகுதிக்கு சென்றிருந்தார்.
காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி பர்கான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து வன்முறை வெடித்தபோது போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினரின் ஆயுதங்களை பறித்தனர் என்று தெரியவந்து உள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்னர் குல்காமில் தாம்கால் காஞ்ச் போராவில் உள்ள போலீஸ் நிலையத்தில் போராட்டக்காரர்கள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட போது தானியங்கி துப்பாக்கிகள் உள்பட 70 துப்பாக்கிகளை எடுத்து சென்றுவிட்டனர் என்று தகவல்கள் தெரிவித்து உள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டு உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.