ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியான லாங்கோட், ராம்பூர், நாம்காம் ம்,மற்றும் ஹண்ட்வாரா ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் எல்லையில் ஊடுருவ பயங்கரவாதிகள் முயற்சித்தனர். இதையடுத்து உஷாரான ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளின் முயற்சியை முறியடித்தனர். மேலும் எல்லையில் உள்ள பாரமுல்லாவில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றதாக தகவல் வந்துள்ளது. பூஞ்ச் பகுதியிலும் பதற்றம் நிலவி வருகிறது.
அதேபோல், வடக்கு காஷ்மீரின் குப்வாரா பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பதில் தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளை ராணுவம் விரட்டியடித்தது. ஹண்ட்வாராவில் அருகே உள்ள லாங்கேட்டில் உள்ள ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய இரண்டு பயங்கரவாதிகளை ராணுவம் சுட்டுக்கொன்றது.
கடந்த மாதம் யூரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்; அதற்க்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பயங்கரவாதிகள் 7 முகாம்களை அதிரடி தாக்குதல் நடத்தி இந்திய ராணுவம் அழித்தது. இதனால் எல்லையில் பதற்றம் உருவாகியுள்ளது.